கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் இணையும் 'தக் லைஃப்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் "தக் லைஃப்". இப்படத்தின் டிரெய்லர் இன்று (மே 17, 2025) மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லர் வெளியீட்டுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைத்தளங்களில் "தக் லைஃப்" டிரெய்லர் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் இதுவரை காணாத அவதாரத்தில் மிரட்டலாக இருக்கிறார். அவருக்கு நிகராக சிம்புவும் தனது நடிப்பால் கவனத்தை ஈர்க்கிறார். த்ரிஷா மற்றும் மற்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர் என்பது டிரெய்லரைப் பார்க்கும்போது தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை டிரெய்லருக்கு மேலும் வலு சேர்க்கிறது. ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு ஆகியவை படத்தின் தரத்தை உயர்த்திக் காட்டுகின்றன. சண்டைக் காட்சிகள் மிகவும் பிரமாண்டமாகவும், விறுவிறுப்பாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மீண்டும் இணைந்த கமல் - மணிரத்னம்:
"நாயகன்" திரைப்படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ளதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. "வாழ்க்கையின் காரணம் கொல்வதற்க்கான காரணம்" என்ற படத்தின் டேக்லைன் படத்தின் கதைக்களம் வன்முறை நிறைந்ததாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இந்தப் படத்தில் சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மிரட்டலான இசையுடன் பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த டிரெய்லர் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. "தக் லைஃப்" திரைப்படம் வரும் ஜூன் 5, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரசிகர்கள் இப்படம் ஒரு ஆக்சன் விருந்தாக இருக்கும் என்று நம்புகிறார்கள். திரையரங்குகளில் இப்படம் என்ன மாதிரியான சாதனைகளை படைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
