அமுல் பேபினு கூப்பிட்டா அப்படி ஒரு கன்றாவி அர்த்தம் இருக்கு - தனுஷ் கேங் தான்.. சுசித்ரா சொன்ன சீக்ரெட்!
Singer Suchitra : தமிழ் சினிமாவில் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் திகழ்ந்து வரும் ஒருவர் தான் சுசித்ரா. தற்பொழுது "அமுல் பேபி" என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் இதுதான் என்று கூறி சில சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளார் அவர்.
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக படகியாக பயணித்து வரும் ஒருவர்தான் சுசித்ரா, பல சூப்பர் ஹாட் தமிழ் திரைப்படங்களில், இவர் நாயகிகளுக்கு டப்பிங் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்த சுசித்ரா துவக்க காலத்தில் பண்பலை வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். இந்த சூழலில் திரைப்படங்களில் பாடல்களை பாட துவங்கிய அவர், பிரபல நடிகர் கார்த்திக் குமார் அவர்களை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் சுமார் 12 ஆண்டுகள் கழித்து அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல பிரபல நடிகர் தனுஷ், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் சஞ்சிதா செட்டி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அடங்கிய பல அந்தரங்க வீடியோக்கள் "சுச்சி லீக்ஸ்" என்ற தலைப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கணவரை சுசித்ரா பிரிந்த நிலையில் அவருக்கு மனநலம் குறித்த பிரச்சினைகள் இருக்கின்றது என்ற செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் அவர் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் அதன் பிறகு கடந்த 3 ஆண்டுகள் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல்கள் கூட வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பேச துவங்கியுள்ளார் சுசித்ரா.
பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதற்கு முழு காரணம் மாயா தான் என்றும், அவர் ஒரு லெஸ்பியனாக இருப்பதனால், அவர் தனது சக போட்டியாளர் பூர்ணிமா அவர்களையும் தன்னுடைய ஆசை வலையில் விழவைக்க முனைவதாகவும் பகிரங்கமாக சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை எதிர்த்து மாயா குடும்பத்தினர் போலீசாரிடம் சுசித்ராவிற்கு எதிராக புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தினேஷ் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரிடம் கடும் மோதல் நிலவி வருகிறது. நரியென தினேஷை, விஷ்ணு அழைத்த நிலையில், விஷ்ணுவை பதிலுக்கு அவர் "அமுல் பேபி" என்று அழைத்ததும் கடுமையான கோபத்திற்கு உள்ளானார் விஷ்ணு. ஆனால் அமுல் பேபி என்று விஷ்ணுவை தினேஷ் அழைத்ததும் அவர் கோபப்பட்டதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினார்.
ஆனால் தனுஷ் மற்றும் அவர்களுடைய கேங், அமுல் பேபி என்ற வார்த்தைக்கு தனி அர்த்தம் ஒன்றை வைத்து இருக்கிறார்கள் என்று கூறி பேசியுள்ளார் சுசித்ரா. அவர் வெளியிட்டுள்ள தகவலின் படி "வெள்ளை நிற பம்" இருப்பவர்களை தான் அமுல் பேபி என்று தனுஷ் கேங் அழைக்கும் என்றும், இது விஷ்ணுவுக்கும் தெரியும் என்றும், அதனால் தான் தன்னை அப்படி அழைத்ததும் கோபப்பட்டு உள்ளார் என்றும் சுசித்ரா கூறியுள்ளார்.