பாலிவுட் உலகை கலக்கிய "12th Fail" திரைப்படம்.. கோலிவுட்டில் ரீமேக் ஆகப்போகுது - களமிறங்குகிறாரா சூர்யா?
Suriya in Remake Movie : சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் நடிகர் சூர்யாவின் புகழை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டுசென்றது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் பாலிவுட் உலகின் ஒரு திரைப்படத்தின் ரீமேக்கில் சூர்யா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Suriya
நடிகர் சூர்யா தான் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக தேர்வு செய்து, அதில் சிறந்த முறையில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருந்து வருகிறார். ஏற்கனவே பல உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்த நடிகர் சூர்யா, மீண்டும் ஒரு உண்மைக் கதையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
12th Fail
இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஹிந்தி மொழியில் வெளியான "12th Fail" என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் மனோஜ் குமார் சர்மா என்பவருடைய வாழ்க்கையை தழுவி எழுதப்பட்ட ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2D Entertainment
விது வினோத் சோப்ரா என்பவர் இயக்கிய அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமத்தை சூர்யா அவர்கள் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.