தளபதி விஜய்யின் மாஸ்டர் பட ஷூட்டிங் நேற்றுடன் நெய்வேலியில் நிறைவுபெற்றது. இதை கொண்டாடும் விதமாக தன்னை பார்க்க திரண்டு வந்த ரசிகர்களுடன் வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்துக்கொண்டார் நடிகர் விஜய். ஐ.டி.ரெய்டால் அலைக்கழிக்கப்பட்ட விஜய்க்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் விதமாக வந்த  ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அந்த போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்....!

விஜய் செல்ஃபி வெளியிட்ட வேகத்தில், அதை போஸ்டராக அடித்து ஊர் முழுக்க ஒட்டிவிட்டனர் ரசிகர்கள். விஜய் படங்களில் இடம் பெறும் டேரரான அரசியல்  வசனங்களை பார்த்து, எங்க அரசியலுக்கு வந்திடுவாறோங்கிற காழ்ப்புணர்ச்சியில், எங்க அண்ணன் மேல ஐ.டி ரெய்டை விட்டாங்க என பொங்கியெழுத்துள்ளது ரசிகர்கள் பட்டாளம். 

இதையும் படிங்க: விஜய்க்கு அடுத்து விஜய்சேதுபதிக்கு வருகிறது ஆப்பு... வாண்டடா வந்து வண்டியில் ஏறும் மக்கள் செல்வன்....!

என் மிகப்பெரிய சொத்தே என் ரசிகர்கள் தான் என்பார் விஜய். அந்த சொத்து விவரத்தை ட்வீட்டரில் போட்டு அதகளப்படுத்திவிட்டார். அதை நிரூபிக்கும் விதமாக விஜய் ரசிகர்களும் இதுதான் தளபதியின் கணக்கில் காட்டப்படாத சொத்து என கொட்டை எழுத்தில் பேனர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலருது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

இந்த விடியோவை பாருங்க: விஜயின் செல்ஃபி அரசியல்.. பகீர் கிளப்பும் பின்னணி வீடியோ..!