லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார். நான் எல்லாம் யார் தெரியுமா? தமிழ் சினிமாவிலேயே முன்னணி நடிகர் என்ற கெத்து எல்லாம் இல்லாமல். வெயிட்டான கதாபாத்திரம் என்றால் வில்லன் வேடத்திற்கு கூட ஓகே சொல்லிவிடுகிறார். தமிழைத் தாண்டி தற்போது தெலுங்கிலும் வில்லனாக வேஷம் கட்ட ஆரம்பித்துவிட்டார் மக்கள் செல்வன். 

இதையும் படிங்க: சும்மா இருந்தவரை தூண்டிவிட்டு "சூப்பர் ஸ்டார்" ஆக்கிய ஐ.டி.ரெய்டு...தளபதியின் மாஸ்டர் செல்ஃபி பார்த்த வேலை...!

புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள படம் "உப்பெனா". இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இதில் ஹீரோயினின் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கெட்டப் மற்றும் பெயருடன் இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அம்பாசிட்டர் கார் மீது சாய்ந்து நின்றபடி முறைத்து பார்க்கும் விஜய் சேதுபதியின் செம்ம டேரர் லுக், தாறுமாறு வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக பிரபல நடிகையிடம் தூது போன நயன்தாரா... கோலிவுட்டில் பரபரப்பு...!

அந்த படத்தில் விஜய் சேதுபதியின் பெயர் ரயனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தில் விஜய் சேதுபதி டேரரான வில்லனாக நடித்திருப்பார் போல, அதனால் தான் பெயரைக்கூட இப்படி வித்தியாசமாக வைத்துள்ளனர் என தெலுங்கு ரசிகர்கள் வியந்து வருகின்றனர். 

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிக்ஸர் அடித்துள்ள சமயத்தில், செகன்ட் லுக் போஸ்டர் விஜய் சேதுபதியை கிளீன் போல்ட் செய்துவிட்டது. காரணம் அந்த போஸ்டரில் விஜய்சேதுபதி தம்மடித்துக் கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் தங்களது போஸ்டர்களில் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்தால் பிரச்சனை வருவது நிச்சயம். 

இதையும் படிங்க: ஏ.ஆர்.முருகதாஸ் விஷயத்தில் பலித்த டி.ராஜேந்தர் சாபம்... தர்பாரால் வந்த வினை...!

இதற்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் திரைப்படத்திற்கும் அந்த சிக்கல் வந்தது. அந்த படத்தின் போஸ்டரில் விஜய் தம்மடிப்பது போன்று இருந்தது பிரச்சனையை கிளப்பியது. சில மாதங்களுக்கு முன்பு தான் மண்டி ஆப் விளம்பரத்தில் நடித்ததற்காக சிறு, குறு வியாபாரிகள் விஜய்சேதுபதிக்கு போராட்டங்களை நடத்தினர். அது எல்லாம் சரியாகி இப்ப தான் விஜய் சேதுபதியின் வண்டி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கிறது. இப்ப போய் இப்படி ஒரு போஸ்டர் தேவையா? என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.