தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு - பார்கவி என்ற பெண்ணை திடீர் கல்யாணம் செய்து கொண்டது தான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பு பேச்சாக உள்ளது. யோகிபாபுவின் திருமணம் குறித்து சோசியல் மீடியாவில் பரவாத வதந்திகள் இல்லை. துணை நடிகையுடன் செல்ஃபி எடுத்து ஒரு குத்தமாய்யா... உடனே அதுதான் கல்யாண பொண்ணுன்னு சொல்லிட்டாங்க. அதை யோகிபாபுவும், துணை நடிகையான சபீதா ராயும் மறுத்தனர்.

இதையும் படிங்க:அப்படி எதுவும் இல்லைன்னாரே... சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த யோகிபாபு திருமணம்...!

இந்நிலையில் வந்தவாசி அருகேயுள்ள மேல்நகரம்பேடு என்ற கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் காதும், காதும் வைத்த மாதிரி மணப்பெண் பார்கவி கழுத்தில் தாலி காட்டியுள்ளார் யோகிபாபு. இந்த கல்யாண வைபோகத்தில் பங்கேற்றது நெருங்கிய நண்பர்கள் சிலர் மட்டும் தானாம். உறவினர்கள் கூட பெரும்பாலும் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது. 

சினிமாவில் படாதபாடு பட்டு இப்படி ஒரு இடத்திற்கு வந்துள்ள யோகிபாபு, சினிமா பிரபலங்களை அழைத்து கோலாகலமாக திருமணத்தை நடத்தாமல், ஏன்? இப்படி கிராமத்து கோவிலில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல் திருத்தணி முருகன் கோவிலில் தான் முதலில் திருமணம் செய்வதாக முடிவு செய்திருந்தாராம். அந்த தகவல் மீடியாக்களில் பரவியதால் தான், அவசர அவசரமாக மேரேஜ் லோக்கேஷனை மாற்றிவிட்டாராம் யோகிபாபு. 

இந்த திருமணத்தில் முக்கியமான டுவிஸ்ட் என்னவென்றால், மணப்பெண்ணின் அப்பா, அம்மா உள்ளிட்ட நெருங்கி சொந்தங்கள் பங்கேற்கவில்லை என்றும், பங்கேற்றனர் என்றும் மாறி, மாறி கூறப்படுவது தான். மேலும் யோகிபாபுவிற்கு நடந்தது காதல் திருமணம் என்றும், அதனால் தான் மீடியா வெளிச்சம் கூட படாமல் அவசர, அவசரமாக கல்யாணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: விருது விழாவில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... கறுப்பு கவுனில் மறைக்க வேண்டிய இடங்களை ஓப்பனாக காட்டிய பிரபல நடிகை...!

ஆனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி உள்ளதால் செம்ம  பிசியாக இருக்கும் யோகிபாபு குறித்த தேதியில் திருமணத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டதாகவும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அனைத்து பிரபலங்களையும் அழைத்து கிராண்டாக நடத்திவிடலாம் என்றும் நினைத்து தான் இப்படி சிம்பிளாக திருமணத்தை நடத்தி முடித்தாராம்.