நடிகர்கள் விஜய்  சேதுபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் “இடம் பொருள் ஏவல்” படம் முழுமையாக முடக்கப்பட்ட பிறகும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் “இடம் பொருள் ஏவல்”. தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நந்திதா, ஐஸ்வர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முதல் முறையாக யுவன் சங்கர் ராஜாவும் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.2014ம் ஆண்டு படப்பிடிப்புகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தயாராக இருந்த இந்த திரைப்படம் இன்று வரை ரிலீஸ் செய்யப்படவில்லை. 

இதையும் படிங்க: கர்ப்பமாக இருப்பது உண்மை தான்... அம்மாவானதை உறுதி செய்தார் மைனா நந்தினி...!

2014ம் ஆண்டு இந்த படத்தை தயாரித்த லிங்குசாமி தயாரித்து இயக்கிய “அஞ்சான்” திரைப்படம் தோல்வி அடைந்தது. இதனால் கடும் பண நெருக்கடியால் “இடம் பொருள் ஏவல்” படத்திற்கான பணிகள் தள்ளிப்போனது.  இயக்குநர் சீனு ராமசாமி மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வர  வேண்டுமென முயன்று வந்தார். இந்நிலையில் நேற்று பட ரிலீஸ் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க: லாக்டவுனால் மன அழுத்தம்...“வசந்த மாளிகை” பட நடிகை வாணிஸ்ரீ மகன் தற்கொலை?

அதில், “சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல்.இது திரைப்படந்தான் ஆனால் எனக்கு பிள்ளை,இயக்குநர் திரு,லிங்குசாமிக்கு நன்றி #இடம்பொருள்ஏவல் வெளியீடு” என்று தான் பிள்ளைக்கு சமமாக பாவிக்கும் “இடம் பொருள் ஏவல்” திரைப்படம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆக உள்ளதை குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

இந்நிலையில் படம் ஜூலை மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சந்திரபோஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் ட்விட்டரில் செய்தி பரப்பி வருவதாக தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இடம் பொருள் ஏவல் ரிலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம். கொரோனா தொற்று ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்களிடம் கலந்து பேசி, எங்கள் திரைப்படத்திற்கு ஒரு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று எங்கள் நிறுவனம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.