‘விஸ்வாசம்’ படம் வெற்றிகரமான 50 வது நாளைக் கடந்ததைக் கொண்டாடுவதற்காக சிறப்புக் காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், படத்திரையிடலுக்கு ஓவர் உற்சாகமாக வந்திருந்த அஜீத் ரசிகர்கள் தியேட்டரை சேதப்படுத்தி துவம்சம் பண்ணியுள்ளனர். இந்த கலாட்டாவில் ரூ 6 லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றும் அதற்கு முன் தினமும் தமிழகம் முழுக்கவே ரஜினி மற்றும் அஜீத் ரசிகர்கள் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்களின் 50 வது நாள் வெற்றியை போட்டிபோட்டுக்கொண்டாடினர். இதே காரணத்துக்காக துவக்கத்திலிருந்தே அஜீத் ரசிகர்களை அளவுக்கு அதிகமாக உற்சாகப்படுத்தி வரும் சென்னை ரோகினி காம்ப்ளக்ஸ் உரிமையாளர்கள் ‘விஸ்வாசம்’ படத்துக்கென்றே பிரத்யேகக் காட்சிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் கலந்துகொண்ட அஜீத் ரசிகர்களில் பெரும்பாலானோர் ஓவர் ‘உற்சாகத்தில் இருந்ததாகத் தெரிகிறது. படம் தொடங்கப்பட்டதிலிருந்தே ஆரவாரமும் கூச்சல் குழப்பங்களும் அதிகமாக ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டரின் சீட்களில் துவங்கி கண்ணுக்குத் தென்பட்ட அத்தனை பொருட்களையும் சேதப்படுத்தத் துவங்கினர்.

இதனால் கடுப்பான தியேட்டர் நிர்வாகம் தனது ட்விட்டர் பதிவில்...இதைவிட தரம் தாழ்ந்து வேறு யாராலும் நடந்துகொள்ளமுடியாது.  இதனால் 6 லட்ச ரூபாய் சேதமடைந்துள்ளது ... மேலும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை சிறப்பு காட்சிகளை ஓட்ட மாட்டோம் .Rhevanth Charan @rhevanth95 No more special shows at @RohiniSilverScr until we find a permanent solution to safeguard our properties.என்று  ரோகினி திரையரங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது