இயக்குநர் சுசீந்திரனிடம் கதையை கேட்ட 30 நிமிடத்திலேயே இதுதான் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸிற்கு ஏற்றப்பட்ட படம் சிம்பு ஓ.கோ. சொன்ன படம் தான் ஈஸ்வரன். இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையைக் கூட கணிசமாக குறைத்து மன்மதன் லுக்கிற்கு  மாறினார். இயக்கு படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக அறிவித்த சுசீந்திரன் ஒரே மாதத்தில் ஷூட்டிங்கை முடித்தார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். 

 

கிராமத்து பின்னணி கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தை திண்டுக்கல்லைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் படமாக்கி முடித்துள்ளது படக்குழு. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

 

இதையும் படிங்க:  சூப்பர் ஹிட் சீரியலுக்கு திடீர் தடை போட்ட சன் டி.வி... சைடு கேப்பில் தட்டித்தூக்கிய முன்னணி சேனல்!

சமீபத்தில் ஆடியோ ரிலீஸை கூட நடத்தி முடித்த படக்குழுவிற்கு புதிதாக சிக்கல் வெடித்துள்ளது. இந்தியா முழுவதும் தியேட்டர்களில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாக உள்ள அதே நாளில் வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தியேட்டர் உரிமையாளர்கள் ஈஸ்வரன் படத்தை தியேட்டர்களில் வெளியிட மாட்டோம் என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஈஸ்வரன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.