கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய அந்த இடத்திற்கு யாரும் பெரிய அளவில் போட்டி போடவில்லை என்றாலும் நடிகர் விஜய் மற்றும் அஜித் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவதற்கு தகுதியான நடிகர்கள் என்று  அவர்களது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் தற்பொழுது உலக அளவில் பல வசூல் சாதனைகளை படைத்து வெற்றி வேகமாக ஓடி வருகிறது. இந்நிலையில் பல ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் நிலவி வரும் ஒரு விவாதம் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கின்ற அந்த விவாதம். 

தளபதி விஜயின் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு உரித்தானவர் விஜய் தான் என்றும், தல அஜித்தின் ரசிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் தமிழ் திரை உலகில் அஜித் தான் என்றும் கூறிவரும், நிலையில் ரஜினி ரசிகர்கற்களோ உலகில் ஒரே சூப்பர் ஸ்டார் அவர் மட்டுமே என்று கூறி வருகின்றனர். 

சாகுற நிலைமைல இருந்தப்போ கூட... என் மார்பை பிடித்து சுகம் கண்டார்கள் - நடிகை சந்தியா பகீர் பேட்டி

இந்நிலையில் புதிதாக களமிறங்க உள்ள ஒரு நடிகர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் இன்று சூளுரைத்துள்ளார் ஒரு இயக்குனர் அவர் வேறு யாருமில்லை பிரபல youtuber TTF வாசனை வைத்து மஞ்சள்வீரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிற செல் ஆம் என்ற அந்த இயக்குனர் தான். 

Scroll to load tweet…

முதல் முறையாக TTF வாசன் கதையின் நாயகனாகவும், நடிகராகவும் களமிறங்க உள்ள திரைப்படம் தான் மஞ்சள் வீரன். இந்த திரைப்படத்தை திருவிக பூங்கா என்ற திரைப்படத்தை இயக்கிய செல் ஆம் என்ற இயக்குனர் இயக்கி வருகின்றார். கடந்து சில நாட்களாகவே இவர் அளித்து வரும் பேட்டிகள் பெரிய அளவில் மக்களால் ரசிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இந்த சூழலில் தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், சந்தேகமே இல்லாமல் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வரக்கூடிய அனைத்து தகுதிகளும் டிடிஎஃப் வாசனுக்கு இருக்கிறது என்று கூறி உள்ளார். இது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை அளித்துள்ள நிலையில், பல முன்னணி நடிகர்களின் ரசிகர்களை "எப்பா ஏய்" என்று கடுப்பாக வைத்துள்ளது.

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் தெரியுமா? - நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி விளக்கம்