உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது ஏன் தெரியுமா? - நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி விளக்கம்

யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. தற்போது இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் ரஜினி.

Why did Yogi Adityanath fall on his feet? clarify by actor Rajinikanth

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. படையப்பா திரைப்படத்துக்கு பிறகு 24 ஆண்டுகளுக்கு பின் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்தது நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழ்நாட்டில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது 500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Why did Yogi Adityanath fall on his feet? clarify by actor Rajinikanth

இதனிடையே இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம் சென்றார்.  இதன் பிறகு உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தனர். இதனையடுத்து லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது. ரஜினிகாந்த் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக பலரும் பல கருத்துக்கள் தெரிவிக்க சமூக வலைத்தளங்களில் கடும் மோதல் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.

 

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து நடிகர் ரஜினிகாந்த் ஆசிப் பெற்றது விமர்சனம் செய்யப்பட்ட  நிலையில் சென்னை திரும்பிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஜெயிலர் படத்தை வெற்றி படமாக்கிய தமிழக ரசிகர்களுக்கு நன்றி. ஜெயிலர் படத்தின் ஒவ்வொரு frame ஐயும் சிறப்பாக செதுக்கிய இயக்குனர் நெல்சனுக்கு நன்றி.

படத்திற்கு சிறப்பாக இசை அமைத்து பிரம்மாண்டமாக வெற்றி பெற செய்த அனிருத்துக்கு நன்றி. யோகிகள், சன்யாசிகள் இளையவர்களாக இருந்தாலும் அவர்கள் காலில் விழுவது என்னுடைய பழக்கம். நட்பு ரீதியாக மட்டுமே உத்திர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்து பேசினேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.

Vijay : கேரளாவில் படுதோல்வியை சந்தித்த வாரிசு.. அப்போ லியோ கதி.? தளபதி விஜய் படத்துக்கு வந்த சிக்கல்

இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios