The next film of atharva
'ஈட்டி'யின் வெற்றிக் கூட்டணியில் மீண்டும் அதர்வா இணைகிறார்.
ஈட்டி படம் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் 2015-ல் வந்தது.
விளையாட்டை மையமாக கொண்ட இந்தப்படத்தில் அதர்வா கடுமையாக உழைத்து உடம்புக்கு தனி கம்பீரம் ஏற்றி நடித்திருந்தார். படம் குறிப்பிடத்தக்க வெற்றியையும் எட்டிப்பிடித்தது!

'நாடோடிகள்', 'மிருதன்' போன்ற படங்களைத் தொடர்ந்து இந்த மாதம் வெளிவரவிருக்கிறசிம்புவின் AAA, ஜீவா - நிக்கிகல்ராணி நடிக்கும் 'கீ' படத்தின் தயாரிப்பாளரும் மைக்கேல் ராயப்பன்தான் என்பது இன்னொரு செய்தி.
இப்போது அதர்வா நடிக்கும் படத்துக்கு டைட்டில் முடிவாகவில்லை.
டைட்டில் மட்டுமல்ல, ஹீரோயின் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் யார் என்பதும் இன்னும் முடிவாகவில்லையாம்!
'ஈட்டி' படத்தில் ஹீரோயினாக நடித்த sriதிவ்யாவே இந்தப்படத்திலும் அதர்வாவுடன் டூயட் பாடலாம் என யூகத்தின் அடிப்படையில் தகவல்கள் வலம் வருகிறது.
'டார்லிங்', 'எனக்கு இன்னொரு பேரு இருக்கு' படங்களை இயக்கிய இந்த படத்தை இயக்கவுள்ளார்.
