2500 திரையரங்குகளில் வெளியாகும் தி லெஜண்ட்.. சரவெடியாய் கலக்கும் புதிய டிரைலர்!

சரவெடி என்கிற பாடலுடன் ட்ரைலர் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகன், விவேக் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார் சரவணன் அருள்.

The Legend will release in a  2500+ theatres

சமீபத்தில் கதாநாயக உயர்ந்துள்ள லெஜன்ட் சரவணன் தனது சமூக ஊடகப் பிரவேசம் குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் லெஜன்ட் சரவணன் தற்போது ட்வீட் கணக்கை துவங்கியுள்ளார். தனது முதல் வரவேற்பு ட்வீட்டில், சமூக ஊடக உலகில் நுழைந்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று எழுதியதோடு ,தி லெஜன்ட் ட்ரைலரையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...பேப்பர் ராக்கெட் விட்ட கிருத்திகா உதயநிதி.. ஆறு அந்நியர்களின் டிரைலர் இதோ!

சரவெடி என்கிற பாடலுடன் ட்ரைலர் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நாயகன், விவேக் உள்ளிட்டோரின் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.  மேலும் இந்த படம் உலகம் முழுவதும் 2500 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார் சரவணன் அருள்.  வரும் ஜூலை 28ஆம் தேதி தி லெஜண்ட்  வெளியாக உள்ளது.

 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகி உள்ள சரவெடி பாடலில் முன்பு வெளியான சண்டை காட்சிகள், பாடல் காட்சிகள், ரொமான்ஸ் என அனைத்து காட்சிகளின் சிறு சிறு தொகுப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது தற்போது இந்த ட்ரைலர் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு... ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!

 பிரம்மாண்ட வியாபார ஸ்தலமாக மாறி உள்ள சரவணா ஸ்டோர்ஸின் அதிபர் லெஜன்ட் சரவணன் தனது கடைக்கான விளம்பரத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர். இவர் தனது விளம்பரத்திற்காக முன்னணி நாயகிகளான ஹன்சிகா தமன்னா உள்ளிட்டோருடன் ஆடிய நடனம் விமர்சனங்களுக்கு உள்ளானது. இருந்த போதிலும் பின்வாங்காத லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் என்னும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். ஜேடி ஜெர்ரி என இரட்டையர்களால் இயக்கப்பட்ட படத்தை தி லெஜண்ட் மூலம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளார் நாயகன் அருள்.

The Legend will release in a  2500+ theatres

படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக ஊர்வசி ராவ்டேலா நடித்துள்ளார்.   தி லெஜென் படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகம் ஆகிறார் ஊர்வசி ராவ்டேலா. இவர்களுடன் நாசர், பிரபு, சுமன் மறைந்த சின்ன கலைவாணர் விவேக், இமான் அண்ணாச்சி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு... பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மிகப் பெரிய ரிலீஸுக்காக காத்திருக்கிறது. டீசர் மற்றும் டிரெய்லர் பாடல்கள் படத்திற்கு ஒரு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுடன் உரையாடத் திட்டமிட்டுள்ளார் சரவணன் அருள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios