பேப்பர் ராக்கெட் விட்ட கிருத்திகா உதயநிதி.. ஆறு அந்நியர்களின் டிரைலர் இதோ!
கிருத்திகா உதயநிதி பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டலிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது.
நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். இதில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதில் சந்தானம், ராகுல் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் தோன்றியிருந்தனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது வணக்கம் சென்னை.
மேலும் செய்திகளுக்கு... பேன்ட் போடாமல்... உள்ளாடைக்கு மேல் கோட் மட்டும் போட்டு கவர்ச்சி ரகளை செய்யும் யாஷிகா! ஹாட் போஸ்!
இதையடுத்து கிருத்திகா விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கியுள்ளார். கொள்ளைக்காரனாக நாயகன் நடித்த இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளி படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். நாயகனே இசையமைத்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு... ரியல் ஹீரோ சார் நீங்க... சென்னை ஏர்போட்டில் அஜித் செய்த காரியம்! வைரலாகும் வீடியோ..!
தற்போது இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் டிஜிட்டலிலும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. காளிதாஸ் ஜெயராம், தானியா ரவிச்சந்திரன், கௌரி ஜி கிஷான், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்தி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூலை 29 அன்று திரையிடப்படும் என தெரிகிறது.
அந்த ட்ரைலரின் படி தமிழ்நாட்டில் சாலை பயணித்தை தொடங்கும் ஆறு அந்நியர்கள் தங்கள் தனிப்பட்ட சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதை சுற்றி கதை நகர்கிறது. பயணத்தின் போது விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றும் சுவாரசியம் கலந்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. 2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்ட இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது.