The kashmir files: தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்ந்து வசூலில்பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில், 200 கோடி வசூலை தொட்டுள்ளது.
தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் தொடர்ந்து வசூலில்பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.திரையரங்குகளில் வெளியாகி ஒரு வாரம் மட்டுமே கடந்துள்ள நிலையில், 200 கோடி வசூலை தொட்டுள்ளது. பிரபல பாலிவூட் இயக்குனர், விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில், கேர், மிதுன் சக்ரவர்த்தி, பல்லவி ஜோஷி, தர்ஷன் குமார் ஆகியோரின் நடிப்பில் கடந்த 11 ம் தேதி வெளியான திரைப்படம் ‘தி காஷ்மீர் பைல்ஸ்’.

தி காஷ்மீர் பைல்ஸ்’ கதை களம்:
1980களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு தி காஷ்மீர் பைல்ஸ் படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தை கொண்டாடும் பாஜகவினர்:

படத்தைப் பார்த்த பிரதமர் மோடி உள்ளிட்ட, பாஜகவினர் படத்தை கொண்டாடி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமீர்கான் உள்ளிட்டவர்களுக்கு படத்திற்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களை விமர்ச்சிக்கும் காட்சிகள்:

எதிர்க்கட்சிகள், உண்மைக்கு மாறாகப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, இப்படத்தில் இஸ்லாமியர்கள் காஷ்மீர் பண்டிட்டுகளைக் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் சர்சையை கிளப்பியுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.

வசூல் சாதனை:
காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 10 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கும் நிலையில், இதுவரை ரூ. 190 கோடி வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை எட்டலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியான இரண்டு வாரங்களை கடந்த நிலையில், 200 கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது.
