Puneeth Rajkumar: மறைந்த நடிகர் புனித்திற்கு கிடைத்த மிக பெரிய கவுரவம்...! நெகிழ்ச்சியுடன் வாங்கி சென்ற மனைவி!

Puneeth Rajkumar: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில்,கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

Puneeth Rajkumar awarded a posthumous doctorate by the University of Mysore

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு, மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில்,கெளரவ டாக்டர் பட்டம்  வழங்கப்பட்டது.

கன்னட உலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். புனித் ராஜ்குமார் ஒரு நடிகர் என்பதை தாண்டிய அவரது மனிதநேயம், மக்களுக்கு உதவும் குணம் ஆகியவற்றால் இன்று வரை மறக்க முடியாமல், மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். இவர், 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி உடற்பயிற்சி முடிந்து வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 

Puneeth Rajkumar awarded a posthumous doctorate by the University of Mysore

கன்னட உலகின் சூப்பர் ஸ்டார் மரணம்:

46வயதேயான அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

'ஜேம்ஸ்' படம் வெற்றி:

Puneeth Rajkumar awarded a posthumous doctorate by the University of Mysore

புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படம் சர்வதேச அளவில் 4000 திரையரங்குகளில்  கடந்த 17 ஆம் தேதி ரிலீசானது. புனீத்தின் கடைசி படம் திரையில் வந்ததால், அவரின் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ’ஜேம்ஸ்’ நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மறைந்த நடிகர் புனித்துக்கு டாக்டர் பட்டம்:

இந்த நிலையில், இன்று மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில் கெளரவ நடிகர் புனித்துக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. புனித்துக்கான கவுரவ டாக்டர் பட்டத்தை, அவரது மனைவி அஸ்வினி அதனைப் பெருமையுடனும் நெகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார்.

Puneeth Rajkumar awarded a posthumous doctorate by the University of Mysore

மேலும் முன்னதாக, புனித் ராஜ்குமாரின் தந்தை மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கும்  கடந்த 1976 ஆம் ஆண்டு, மைசூர் பல்கலைக் கழகம்கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க....A. R. Rahman dress: அடேங்கப்பா...லட்ச கணக்கில் ஏலம் போன ஏ . ஆர் ரகுமான் ஒற்றை ஆடை..! எத்தனை லட்சம் தெரியுமா..?


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios