இணையதளத்தில் வெளியான தம்பி, ஹீரோ..! ஷாக்கான படக்குழுவினர்..! 

டிசம்பர் 20ம் தேதியான நேற்று முன்னணி நாயகர்கள் நடித்த படமான தம்பி மற்றும் ஹீரோ படம் வெளியானது.

இந்த நிலையில், படம் வெளியான ஒரே நாளில் பைரஸி இணையதளத்தில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஜோதிகா சத்யராஜ் நடிகர் கார்த்தி என முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று வெளியானது. அதே நாளில் சிவகார்த்திகேயன் மற்றும் அர்ஜுன் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த ஹீரோ படமும் வெளியானது.

இவ்விரு படங்களும் நேற்று ஒரே நாளில் வெளியான தருணத்தில் நேற்று மாலையே இணையத்தளத்திலும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்னதாக ஹீரோ படம் பெரிய அளவுக்கு இல்லை என்றும் ஒருமுறை கூட பார்ப்பதற்கு ஏற்றதா இல்லை என கருத்து தெரிவித்து உள்ளனர்.

கருத்து வெளியான சில மணி நேரத்தில் இணையதளத்தில்  இந்த எ படங்கள் வெளியாகி உள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்