கிஸ்புவின் அலாதியான நேர்த்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தாமதிக்காமல் வேகமாக தனது கேமராவை எடுத்து அந்த இளம் பெண்ணை படம் பிடித்தார். 

அந்த கால ஊடகம் :

முன்பெல்லாம் முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ளவோ அல்லது அறிந்து கொள்ளவோ மணிக்கணக்கில் நேரம் எடுக்கும்..மாலை 6 மணி செய்திக்காக காத்திருந்தும். இன்றைய நிகழ்வுகள் நாளைய செய்தி தாள்களில் வரும் வரை காத்திருப்பதும்..அப்படி நேரம் கழிந்த செய்திகளை படித்து விட்டு சிலாகித்து கொள்வதும் நாம் மறந்திராத ஒன்று. ஆனால் அந்த நிலை இப்போதில்லை.

வைரஸை விட வேகமாக பரவும் செய்திகள்:


இன்றைய இணைய தள உலகத்தில் எல்லாமே பாஸ்ட் தான். துரித உணவு போல இன்ஸ்டன்ட் தான். உலகின் எங்கோ மூலையில் நடக்கும் ஒவ்வோர் நிகழ்வும் நொடிப்பொழுதில் பரவி விடுகிறது. அந்த வகையில் எளியோர் குறித்த செய்திகள் பரவி அவர்களுக்கான உதவிகளும் கிடைத்து விடுகினறன தெருஓரம் பாடகர்கள் பலர் சோஷியல் மீடியா உதவியால் பிரபலங்கள் ஆனா கதையும் நிகழத்தான் செய்துள்ளது. மருத்துவம் முதல் கல்வி, உணவு என எல்லாவற்றிற்கும் சோசியல் மீடியாவின் உதவி காய் கொடுத்து வருகிறது. பக்கத்து வீட்டுக்காரனை கண்டு கொள்ளாத பலரும் சமூக ஊடகங்களின் மூலம் உதவிக்கரம் நீட்டுபவர்களாக வலம் வரத்தான் செய்கிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு ...BiggBoss Pavani reddy : சிம்பு கூப்பிட்டா உடனே போயிடுவேன்... பிக்பாஸ் பாவனி ரெட்டி சொல்கிறார்

பேரிடர் காலங்களில் பேருதவி : 

மழை வெள்ளம், புயல், கொரோனா ஊரடங்கு போன்ற விதவிதமான பேரிடர்களை நாம் அடுத்தடுத்து சந்தித்து வருகிறோம். இந்த சூழலில் நம்மை சுற்றி இருப்பவர்களை கவனிக்க நமக்கு நேரம் எது. இந்த இக்கட்டான சூழலில் பெரிதும் உதவி கரமாக இருந்தது சோசியல் மீடியாதான். உணவு , மருந்து என மூக்கையா தேவைகள் இன்றி தவித்தவர்களின் பரிதாபங்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அறியும் வெளிநாட்டவர்கள் கூட நம் நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி இருந்தனர்.

மேலும் செய்திகளுக்கு ...“பாகுபலி 3 பாகம் எப்போது..?” பிரபாஸ் ஏஷியாநெட் தளத்துக்கு பிரத்தியேக பேட்டி

ஒரே இரவில் பிரபலங்களாகும் எளியோர் : 

உதவிகளுக்கு மட்டுமல்ல எளியோரை பிரபலங்களாக இந்த மேஜிக் சோஷியல் மீடியா மாற்றி வருகிறது. கடலை வியாபாரி லட்சாதி பதியானர். பிதாமகனில் சொல்வது போல கடலை ..கூவி விற்காமல் கொஞ்சம் வித்யாசமாக மெட்டுக்களுடன் விற்ற வியாபாரி பூபன் பத்யாகரின் 'கச்சா பாதாம்' தான் இன்றைய வேர்ல்டு ட்ரெண்டிங். அதேபோல குஜராத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி தொழிலதிபராக மாற்றிய மாடர்ன் போட்டோ சூட். அந்த வரிசையில் பலூன் விற்ற இளம் பெண் ஒரே இரவில் ட்ரெண்டாகியுள்ளார்.

பலூன் விற்ற பெண் மாடல் அழகி : 

கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கேரள மாநிலம் ஆண்டலூர் காவு திருவிழாவில் கிஸ்பு என்கிற இளம் பெண் பலூன் விற்பதைக் கண்ட புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன். அவளது அலாதியான நேர்த்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் தாமதிக்காமல் வேகமாக தனது கேமராவை எடுத்து அந்த இளம் பெண்ணை படம் பிடித்தார். இந்த புகைப்படங்களை அர்ஜுன் இன்ஸ்டாவில் பகிர நம்மமுடியாத அளவிற்கு அது வைரலாகி உள்ளது இதையடுத்து பலூன் விற்பனை செய்து வந்த கிஸ்புவை போட்டோ மடலாக்க அஅர்ஜுன் முயற்சித்துள்ளார். பின்னர் அவர்களின் பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று கிஸ்பு இன்று போட்டோ மாடலாக மாறியுள்ளார். இவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

View post on Instagram