Prabhas exclusive : கமர்ஷியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கு சற்று மாறுதல் தருவதற்காக ராதே ஷ்யாம் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். அதோடு பாகுபலி குறித்து பேசுகையில் பாகம் 3 குறித்த சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார் பிரபாஸ்
தெலுங்கு நாயகன் பிரபாஸ் :
பாகுபலி நாயகனை யாருக்குத்தான் பிடிக்காது. தெலுங்கில் நாயகனாக அறிமுகமான பிரபாஸ் பின்னாட்களில் பேன் வேர்ட்ல் ஹீரோவாக பரிமானித்துள்ளார். கடந்த 2000 அம ஆண்டு தெலுங்கில் ஈஸ்வர் மூலம் நடிகராக அறிமுகமான பிரபாஸ் , பின்னர் ரொமாண்டிக் படமான வர்ஷம் , சத்ரபதி, புஜ்ஜிகாடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பெர்பெக்ட், மற்றும் மிர்ச்சி உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தார். காவிய நாய்குக்கேற்ற உடல் வாகை கொண்ட பிரபாஸ் இதுவரை ஏழு பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய பரிந்துரைகளைப் பெற்றுள்ளார் மற்றும் நந்தி விருது மற்றும் SIIMA விருது பெற்றவர் .
பேன் வேர்ல்ட் ஹீரோ பிரபாஸ் :
மேற்குறிப்பிட்ட படங்கள் வெற்றியை ஈட்டியிருந்தாலும். உண்மையில் பிரபாஸை உலகறிய செய்தது எஸ்.எஸ்.ராஜமௌலியின் பாகுபலி தான். முதல் பாகம்அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருந்தது. அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என வீர மங்களின் கதாப்பாத்திரமும். நம்ம சத்தியராஜின் கட்டப்பா பாத்திரமும் தெறி மாஸ் கட்டியிருந்தது. இதையடுத்து ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி வாகை சூடியது. இரண்டாம் பாகம் பத்து நாட்களில் அனைத்து மொழிகளிலும் ₹ 1,000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் என்னும் பெயரை பெற்றது.
மேலும் செய்திகளுக்கு.. பேபி ஷாலினியுடன் ..பேபி ஷாம்லி..தங்கை சந்தித்த குஷியில் அஜித் மனைவி மற்றும் மகள்..

மெழுகு சிற்பத்தைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் :
படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பிரபாஸ் மஹிந்திரா TUV300 க்கான பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார். அதோடு லண்டனில் உள்ள முக்கிய சுற்றுலா இடமான மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் மெழுகு சிற்பத்தைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்னும் பெருமையும் பிரஸுக்கே சேரும். பாகுபலியை தொடர்ந்து 2019 - ல் பிரபாஸ் நடிப்பில் சுஜீத் இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் சாஹோ வெளியானது. இது சாதகமற்ற விமர்சனங்களைப் பெற்ற போதிலும், ரூ. 433 கோடிக்கு மேல் வசூலித்தது.
மேலும் செய்திகளுக்கு.. cuckoo movie actor : வறுமையால் பிளாட்பார்மில் தங்கும் குக்கூ பட நடிகர்.. பாட்டுப்பாடி பிச்சை எடுப்பதாக கண்ணீர்
பாகுபலி 3 பாகம் எப்போது..?
தற்போது பிரபாஸ் ரொமாண்டிக் ஸ்டோரியான ராதே ஷ்யாம் மற்றும் பிரசாந்த் நீல் இயக்கிய ஆக்ஷன் படமான சாலார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்க இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது இந்தப் படத்திற்கான புரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் 11ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்திற்கான புரமோஷன் விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த படக் குழு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து வருஜிக்கின்றனர்.
மேலும் செய்திகளுக்கு.. Thalapathy 67 update : தளபதி 67-ல் ஹீரோயினும் இல்ல.. பாட்டும் இல்லையா? முரட்டு சிங்கிளாக நடிக்கிறாரா விஜய்?
அந்த வகையில் நமது ஏஷியாநெட் செய்தித்தளத்திற்கு நாயகன் பிரபாஸ் பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார். அதில் பாகுபலி படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ள பிரபாஸ்..கமர்ஷியல் படங்களை பார்த்த ரசிகர்களுக்கு சற்று மாறுதல் தருவதற்காக ராதே ஷ்யாம் உருவாகி உள்ளதாக கூறியுள்ளார். அதோடு பாகுபலி குறித்து பேசுகையில் பாகம் 3 குறித்த சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார் பிரபாஸ்.
