ஷாலினியும் , ஷாமிலியும் இவர்களுடன் அஜித் மகள் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சுட்டி குழந்தையாக அறிமுகமான ஷாலினியை யாருக்குத்தான் பிடிக்காது.. என் அம்முக்குட்டி யம்மாவில் க்யூட் பேபியாக அறிமுகமான ஷாலினி... 80களின் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அம்லூ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . 

ஷாலினி கதாநாயகியாக தமிழில் அறிமுகமான முதல் படம் காதலுக்கு மரியதை (1997). மலையாள அணியாதிபிரவு படத்தின் வெற்றிக்குப் பிறகு ஃபாசில் அதை தமிழ் படமாக ரீமேக் செய்தார். அது ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதையடுத்து அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஷாலினி.

கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியானார் ஷாலினி. இதில் அலைபாயுதே படத்தில் தனது அபரிமிதமான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக அவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றார் . ஷாலினி நடிப்பில் இறுதியாக 2001 ஆம் ஆண்டில் வெளியான படமான பிரியாத வரம் வேண்டும். பிரசாந்துடன் சிறு வயது தோழியாக இருந்து மனைவியாகும் கதாபாத்திரத்தில் ஷாலினி நடித்திருந்தார். இந்த படம் வெற்றி பெற்றது.

இதற்கிடையே அமர்க்களம் படத்தின் போது அஜித் - ஷாலினி இடையே காதல் மலர இருவரும் 2000-தில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு திரையில் தோன்றுவதை ஷாலினி நிறுத்தி விட்டார். விரல் விடும் அளவிற்கு மட்டுமே ஷாலினி திரையில் தோன்றி இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். 

மேலும் செய்திகளுக்கு.. கொரோனா வாரியர்ஸ் உடன் மகளிர் தினத்தை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

ஷாலினியை போலவே இவரது தங்கை ஷாமிலியும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பேபி ஷாமிலி என்றும் அழைக்கப்படும் ஷாமிலி மலையாளம் , தமிழ் , கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரிந்த என பன்மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தை அஞ்சலி பாப்பாவாக தனது நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குழந்தை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். அதோடு ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையாக ஷாமிலி தோன்றிய மாலூட்டி திரைப்படம் சிறந்த கேரள மாநில திரைப்பட விருதை வென்றது. இவர் தமிழில் துர்க்கா, தை பூசம் உள்ளிட்ட பல படங்களில் க்யூட் பேபியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்நிலையில் ஷாலினியும் , ஷாமிலியும் இவர்களுடன் அஜித் மகள் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

View post on Instagram