இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்ட நர்ஸுகளுடன் கொண்டாடியுள்ளார்.
சினிமா திரை உலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் தனுஷ் - ஐஸ்வர்யா. ரஜினியின் மகளான தன்னை விட வயது குறைந்த 2004-ம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ரஜினியின் மருமகன் என்கிற அந்தஸ்தோடு தனுஷ் படிப்படியாக முன்னேறி இன்று ஹாலிவுட், பாலிவுட், ஹோலியுட் என எல்லா இடங்களிலும் தனது கால் தடத்தை பதித்து வருகிறார். ஐஸ்வர்யாவும் படம் இயக்குவது, ஆல்பம் தயாரிப்பது என பரபரப்பாக இருந்து வந்தார். இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த தனுஷை வைத்து 3 என்கிற படத்தை இயக்கி அசத்தியிருந்தார்.
இந்த தம்பதிகளுக்கு இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்த இவர்களின் அபரிமிதமான வளர்ச்சியே இவர்களின் பிரிவுக்கு வித்திட்டு விட்டது.. வெளி மாநிலம், வெளி நாடு என படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்த தனுஷுக்கு அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்று விட்டது.

இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டார். அதன் பிறகு காதலர் தினத்தன்று ரொமாண்டிக் சாங் ஆல்பத்தையும் வெளியிட்டிருந்தார். பின்னர் மீண்டும் உடல்னால கோளாறு ஏற்படவே ஐஸ்வர்யா ராஜேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சோசியல் மீடியாவில் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவமனையில் தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டு நர்ஸுகளுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்களை பகிர்ந்த ஐஸ்வர்யா..இந்த கோவிட் நோயின் போது என்னைக் கவனித்துக் கொள்ளும் மிக அழகான செவிலியர்களுடன் மகளிர் தினம். அவர்கள் வகிக்கும் பாத்திரம்...வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கும் அமைதிக்கும் அடித்தளமாக இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் பெண்களையும் மதிக்க என் மகன்களுக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன்...உங்கள் வாழ்வில் பெண்களை நேசியுங்கள்...வாழ்க்கை உங்களை மீண்டும் நேசிக்கும் அங்கே ! என குறிப்பிட்டுள்ளார்.
