cuckoo movie actor : வறுமையால் பிளாட்பார்மில் தங்கும் குக்கூ பட நடிகர்.. பாட்டுப்பாடி பிச்சை எடுப்பதாக கண்ணீர்
cuckoo movie actor : கொரோனா ஊரடங்கு சமயத்தில் ரூமுக்கு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு சென்றதால் தான் பிளாட்பார்முக்கு வந்து பாட்டுப்பாடி பிச்சை எடுப்பதாக நடிகர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குக்கூ படம்
ஜோக்கர் படத்தை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான படம் குக்கூ. அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மாளவிகா நாயர் நடித்திருந்தார். கண்பார்வையற்ற ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான் காதலை எதார்த்தமாக சொல்லும் படமாக குக்கூ அமைந்திருந்தது.
பிச்சை எடுக்கும் நடிகர்
குக்கூ படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு நண்பனாக நடித்திருந்தவர் இளங்கோவன். படம் முழுக்க நாயகனுடனே பயணிக்கு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நிஜத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், தற்போது வறுமை காரணமாக பிளாட்பார்மில் தங்கி பாட்டுப்பாடி பிச்சை எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் சண்டை
இதுகுறித்து சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார் இளங்கோவன். அதில் அவர் கூறியதாவது: எனது சொந்த ஊர் தஞ்சாவூர். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு அவர்களைப் பிரிந்து சென்னை வந்துவிட்டேன். இங்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி. பாட்டு பாடி பிழைப்பு நடத்தி வந்தேன்.
வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனா
கொரோனா ஊரடங்கு சமயத்தில் ரூமுக்கு வாடகை கூட கொடுக்க முடியாத அளவுக்கு சென்றேன். இதனால் தான் பிளாட்பார்முக்கு வந்துவிட்டேன். பாட்டுப்பாடி பிச்சை எடுத்து வருகிறேன். தற்போது சுரங்கப்பாதையில் தங்கும் நான் அரங்கப் பாதைக்கு சென்று மிகப்பெரிய பாடகர் ஆக வேண்டும் என்பதே தனது கனவு” என கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார் இளங்கோவன்.
இதையும் படியுங்கள்... cook with comali Pugazh : பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த புகழ்... வைரலாகும் போட்டோஸ்