ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் இப்பொது முடிந்துவிட்டது.. பரபரப்பை கிளப்பிய கைதி பட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு!
தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டாராக கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக வளம் வந்து கொண்டிருக்கும் ஒருவர்தான் ரஜினிகாந்த்.
அவருடைய சூப்பர் ஸ்டார் என்ற இடத்தைப் பெற தளபதி விஜய் தான் சிறந்தவர் என்று அவருடைய ரசிகர்களும், தல அஜித் தான் சிறந்தவர் என்று அவருடைய ரசிகர்களும் பல ஆண்டு காலமாக மாபெரும் விவாத போரில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக அவரை ரசித்து வரும் அவருடைய ரசிகர்களுக்கு, தமிழ் உலகில் சூப்பர் ஸ்டார் என்பது என்றென்றும் ரஜினிகாந்த் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தெலுங்கு, கன்னட உலகில் வெளியாகும் படங்கள் குறித்தும் அந்த திரை துறையின் வளர்ச்சி குறித்தும் வெகுவாக பாராட்டி பேசினார்.
அதே சமயம் தமிழிலும் போட்டி பொறாமைகள் இன்றி நாம் வளர வேண்டும் என்றும் அவர் கூறினார். இது ஒரு புறம் இருக்க பிரபல தயாரிப்பாளரும், கார்த்தி மற்றும் சூர்யாவின் உறவினருமான ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனதின் உரிமையாளர் எஸ்.ஆர் பிரபு அவர்கள் ஒரு பரபரப்பு ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "ஒரு சூப்பர் ஸ்டாரின் சகாப்தம் வியாபார ரீதியாக தற்பொழுது முடிந்து விட்டது என்று கூறி" பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மேலும் பிற திரை உலக வளர்ச்சிகள் குறித்தும் பேசிய அவர், இந்த மாற்றத்தை நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொரு நடிகர்களும் அவர் அவருக்கு ஏற்றார் போல தங்களுக்கென்று ஒரு மார்க்கெட்டை வைத்துள்ளனர், ஆனால் அதுவும் அவர்களின் படங்கள் வெளியாகும் தேதியை பொருத்தும், கதையை பொருத்தும், போட்டிக்கு வரும் படத்தை பொருத்தும் மாறும் என்றும் அவர் கூறியுள்ளார். இதை புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆதரிக்க தொடங்கும் பொழுது, சினிமாவின் ஒட்டுமொத்த சந்தை எல்லைகளை தாண்டி விரிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.