சென்னை கொருக்குப்பேட்டை.. விஜய் மக்கள் இயக்கம் சார்பாக செய்யப்பட்ட பல உதவிகள் - புஸ்ஸி ஆனந்த் ட்வீட்!
நடிகர் தளபதி விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் பல விஷயங்கள் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் பத்தாம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு சால்வை அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் நடிகர் விஜய்.
முதலாம் தலைமுறை வாக்காளர்களை கவர்வதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் என்று பலரும் கூறி வந்தனர். இந்நிலையில் அதனை தொடர்ந்து தளபதி விஜய் அவர்களின் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடிகர் விஜயின் சொல்லுக்கு இணங்க மாணவர்களுக்கான பயிலகங்கள் துவங்கப்பட்டு வருகிறது.
திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஏற்கனவே இந்த பயிலகங்கள் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் உள்ள பொதுமக்களுக்கு, பல உதவிகளை வடசென்னை கிழக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் செய்துள்ளது.
இது குறித்து தளபதி விஜயின் செய்தி தொடர்பாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் "சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் உள்ள ஆயிரம் பொதுமக்களுக்கு இனிப்புகளும், 500 குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், லஞ்ச் பாக்ஸ் உள்ளிட்டவையும், 100 பெண்களுக்கு புடவை மற்றும் தண்ணீர் குடங்களும்" வழங்கப்பட்டுள்ளது.
மேலும் "பள்ளி குழந்தைகளுக்கு சீருடை, 10 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது", என்று கூறினார். "இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்ததாகவும்" அவர் கூறினார். இந்த அனைத்து உதவிகளும், தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கு இணங்க செயல்படுத்தப்படுகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
ஹிப் ஹாப் ஆதியின் 'வீரன்' கொடுத்த வெற்றி..! பிஸியான இயக்குனராக மாறிய ஏ.ஆர்.கே.சரவன்!