OTTயில் சிறப்பான வெற்றி பெற்ற "சூழல்" இணைய தொடர்.. இரண்டாம் பாகம் கமிங் சூன் - விரைவில் படப்பிடிப்பு!
பிரபல திரைப்பட இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரித்து வெளியிட, இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரன் முருகையன் இயக்கத்தில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இணைய தொடர் தான் சுழல் - The Vortex.
இணைய தொடர்களை விரும்பிப் பார்க்கும் பலரின் மத்தியில் ஒரு மிகச்சிறந்த கிரைன் தில்லர் தொடராக இது வலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பார்த்திபன் இந்த தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல நடிகர்கள் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை சிரியா ரெட்டி, நடிகர் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இந்த இணைய தொடரில் நடித்திருந்தனர். பெண் குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களாலேயே எந்த அளவுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும்.
அதனால் அந்த குழந்தைகள் வளர வளர எப்படிப்பட்ட மனப்பிறழ்வை சந்திக்கிறார்கள் என்பதையும் மிக நேர்த்தியான கதை அம்சத்தோடு கூறிய ஒரு இணைய தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் முதலாவது சீசன் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக சுழல் இணையதொடரின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, விரைவில் இந்த இணைய தொடரின் Pre Production பணிகள் துவங்க உள்ளது என்றும், விரைவில் இதற்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
புதிய படத்திற்காக கைகோர்க்கும் ராணா - துல்கர் சல்மான்!