இன்ஸ்டாகிராம் பிரபலமான, செல்ஃபி ஷாலு என்பவர், நடிகை மாளவிகா நடனமாடி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு, அச்சு அசல் அவரை போலவே டான்ஸ் ஆடி, நடிகையிடம் இருந்து பாராட்டுக்களை பெற்றுள்ளார். 

Instagram பிரபலமான செல்ஃபி ஷாலு என்பவர் நடிகை மாளவிகாவின் பாடலான "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு " பாடலுக்கு டான்ஸ் ஆடி, அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த நிலையில் அவரை வியந்து பாராட்டி உள்ளார் மாளவிகா. இதை தொடர்ந்து இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சமீப காலமாகவே, திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்காத சிலர்... தங்களுடைய திறமையை வெளிப்படுத்தும் விதமாக, இது போன்ற சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு வாய்ப்பு தேடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இப்படி வீடியோ வெளியிட்டு பிரபலமான பலருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

லியோவில் சஞ்சய் தத் செய்யப்போகும் தரமான சம்பவம்..! கழுகோடு என்ட்ரி கொடுத்த 'ஆண்டனி தாஸ்' கிலிம்ஸி வீடியோ!

அந்த வகையில் செல்ஃபி ஷாலு என்பவரும், தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பல பிரபலங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள், மற்றும் வசனங்களை அவர்களைப் போலவே உடை அணிந்து பேசியும், டான்ஸ் ஆடியும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் நடிகை மாளவிகா 2000 ஆம் ஆண்டு நடித்து, வெற்றி பெற்ற 'வெற்றி கொடிகட்டு' படத்தில் இடம்பெற்ற "கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு" பாடலுக்கு அச்சு அசல் அவரைப் போலவே காஸ்ட்யூம்ஸ் அணிந்து டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்துள்ளார்.

வெளிநாட்டில் வெகேஷன்... கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்!

இந்த வீடியோ எப்படியோ மாளவிகாவின் கண்களில் பட, அவர் 'வெரி நைஸ்' என பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பிரபலத்தை பாராட்டி போட்டுள்ள போஸ்ட், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மாளவிகாவின் பாராட்டுக்கு பின்னர், செல்ஃபி ஷாலுவின் வீடியோ படு வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

View post on Instagram