Asianet News TamilAsianet News Tamil

சோதனைகளை வாய்ப்புகளாக மாற்றிய தம்பதி.. மனோகரன் - ஸ்வேதாவின் வாழ்க்கையை மாற்றிய சமூக ஊடக செயலி..!

தங்கள் வாழ்வின் கடினமான கட்டங்களை சமாளித்து ஜோஷ் செயலி மூலம் சோதனைகளையும் வாய்ப்புகளாக மாற்றிய தம்பதியின் ஊக்கமளிக்கும் கதை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

The couple who changed challenges into opportunities Josh social media app changed manoharan swetha life Rya
Author
First Published Feb 27, 2024, 3:21 PM IST

இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியில், 29 வயதாகும் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். மெஷின் என்ஜினியரிங் துறையில் டிப்ளமோ படித்த அவர், தன் வாழ்க்கையை நடத்துகிறார். பெரிலர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் QC ஆபரேட்டராக பணிபுரியும் அவவருக்கு ஸ்வேதா என்ற மனைவியும், யுவனிகா என்ற 5 மாத மகளும் உள்ளனர். எனினும் அவர் தனது சிறிய குடும்பத்தை நடத்த பல சவால்களை எதிர்கொண்டார். 

ஆனால் அவர்களின் கடினமான காலங்களில் வாழ்வில் ஜோஷ் சமூக ஊடக தளம் அவர்களின் வாழ்வில் நம்பிக்கை எனும் ஒளியை ஏற்றியது.. ஆம். ஜோஷ் செயலி இந்த தம்பதியின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏற்கனவே அவர்களுக்கு போதிய நேரமில்லை என்றாலும், மனோகரனும்ம் ஸ்வேதாவும் ஜோஷ் தளத்தில் கண்டெண்டை உருவாக்கி போஸ்ட் செய்ய மாற்று வழியை கண்டுபிடித்தனர். மனோகரன் வேலையில் இருக்கும்போது, ஸ்வேதா வீட்டு வேலைகளை நிர்வகித்து, யுவனிகாவை கவனித்துக்கொள்கிறார், தங்களின் ஜோஷ் கணக்கு ஆக்டிவாக ஈடுபாட்டுடனும் இருப்பதை உறுதிசெய்கிறார்.

சொத்துக்களை வாங்கி குவிக்கும் ஷாருக்கான் மகள்.. இப்ப வாங்கிய நிலம் இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..

இருப்பினும், மனோகர் திடீரென வேலையை இழந்ததால் அவர்களின் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டது. இந்த சவாலான கட்டத்தில், ஜோஷ் தளம் ஒரு மிகப்பெரிய உதவி செய்தது. அந்த தளத்தின் சார்பில் பேசிய குழு, தங்கள் செயலி மூலம் எப்படி உதவ முடியும் என்று விளக்கியது. தொடர்ந்து ஜோஷ் தளத்தில் மனோகரன் பதிவுகளை போஸ்ட் செய்ய தொடங்கினார். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானமும் மனோகரனுக்கு கிடைத்து. 

வேலை இல்லாத காலக்கட்டத்தில் அவர்கள் அந்தத் தொகையை மளிகைப் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வாங்குவதற்குப் பயன்படுத்தினர். மனோகரனுக்கு மீண்டும் வேலை கிடைத்த பிறகும், மனோகரனும் ஸ்வேதாவும் தங்கள் ஜோஷ் பயணத்தைத் தொடர்ந்தனர். ஆரம்பத்தில், ஸ்வேதாவுக்கு இதில் மிகுந்த ஈடுபாடு இல்லை என்றாலும், தனது குடும்பத்திற்காக ஏதாவது செய்ய விரும்பினார், இறுதியில் அவர் ஜோஷ் தளத்தில் இடுகையிடத் தொடங்கினார். ஜோஷ் குழு வழங்கிய ஆதரவையும் வழிகாட்டுதலையும் பயன்படுத்தி, மனோகரன் - ஸ்வேத குடும்பம் ஒவ்வொரு மாதமும் நல்ல வருவாய் ஈட்டுகிறது.

மளிகை சாமான்கள், குழந்தைக்கு தேவையான பொருட்கள் உட்பட அவர்களின் மாதாந்திர செலவுகளை ஈடுகட்ட இது அவர்களுக்கு பெரிதும் உதவியது. இன்னும் சொல்லப்போனால், ஜோஷ் வருவாய் அவர்களின் நீண்டகால சேமிப்பு, அவர்களின் கனவுகளை நிறைவேற்ற உதவுகிறது, அதாவது தங்கள் அன்பு மகளுக்கு தங்கம் வாங்குவது உட்பட பல கனவுகளை நிறைவேற்றி வருகின்றன.

மனோகரனும் ஸ்வேதாவும் தங்கள் மகளின் எதிர்காலத்திற்கான லட்சிய கனவுகளைக் கொண்டுள்ளனர். தங்கள் அன்பு மகளின் முதல் பிறந்தநாளில் ஒரு சவரன் தங்கத்தை பரிசளிக்க விரும்புகிறார்கள், இது அவர்களின் பயணத்தின் மைல் கல்லாகும். கூடுதலாக, அவர்கள் ஜோஷ் வருவாயில் இருந்து வருமானம் மூலம் கோவையில் இருந்து, சென்னைக்கு ஒரு சிறப்பு விமான பயணத்திற்கு திட்டமிட்டுள்ளனர். தங்களின் உறுதி, விடாமுயற்சியின் மூலம் தங்கள் கனவுகளையும் ஆசைகளையும் மனோகர் ஸ்வேதா தம்பதி நிறைவேற்றி வருகின்றனர். 

கவுத்திவிட்ட லால் சலாம்.. சைலண்டாக அடுத்த பட பணிகளை தொடங்கிய ரஜினி மகள்- அடடே ‘இந்தியன் 2’ நடிகர் தான் ஹீரோவா?

மனோகரன் மற்றும் ஸ்வேதாவின் கதை ட ஜோஷ் போன்ற தளங்கள் வழங்கும் வாய்ப்புகளின் மாற்றும் சக்திக்கு ஒரு சான்றாக உள்ளது. அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு விடாமுயற்சி மூலம், சாதாரண தனிநபர்களும் அசாதாரணமான சாதனைகளை செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். துன்பங்களை சிறந்த வாழ்க்கைக்கு படிக்கட்டுகளாக மாற்றுகிறார்கள்.

அனைவரும் விரும்பும் வகையில் கண்டெண்டை உருவாக்கும் திறமை மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பை தேடும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் எனில் ஜோஷ் செயலியை இப்போதே பதிவிறக்கம் செய்து, உங்கள் சம்பாதிக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios