The cost of Superman mutache removal budget is 160 crores This is unjustifiable ...
சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான ஜஸ்டிஸ் லீக் படத்தில் சூப்பர்மேனின் மீசையை அகற்ற 160 கோடி செலவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த படங்களில் சூப்பர்மேனாக நடித்த ஹென்றி கவல், சமீபத்தில் வெளியான ஜஸ்டிஸ் லீக் படத்திலும் சூப்பர்மேனாக நடித்திருந்தார்.
அவர் அந்தப் படத்தில் நடிக்கும் அதே வேளையில் மற்றொரு ஹாலிவுட் படமான மிஷன் இம்பாசிபிள்-6 படத்திலும் நடித்து வந்தார்.
மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடித்தபோது, அவரது கதாபாத்திரம் மீசையுடன் நடிக்க வேண்டியிருந்ததால் அவர் மீசை வைத்திருந்தார். ஆனால், சூப்பர்மேன் கதாபாத்திரம் மீசை இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் அவர் மீசையை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால், மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் ஜஸ்டிஸ் லீக் முழுவதும் மீசையை வைத்துக் கொண்டே நடித்திருக்கிறார்.
அவரின் அந்த மீசையையை கிராபிக்ஸ் மூலம் அகற்றியுள்ளது படக்குழு. படம் முழுவதும் அதை செய்ய சுமார் 25 மில்லியன் டாலர் (அதாவது இந்திய மதிப்பில் 160 கோடி ருபாய்) செலவிடப்பட்டுள்ளது என்று சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.
