இலங்கை கிரிக்கெட் அணியின் பிரபல பவுலர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரித்து எடுக்கப்படவிருக்கும் ‘400’என்ற படத்திலிருந்து விஜய் சேதுபதி வெளியேறவிருக்கிறார் என்ற தகவல்கள் நடமாடி வரும் நிலையில் அப்படத்தில் அவர் நடிக்க எதிர்ப்பு கிளப்பி வரும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் குறித்து காட்டமான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி.

இது குறித்த தனது பதிவில்,...இந்த 'லைக்கா' நிறுவனம் தமிழ் படங்களைத் தயாரிப்பதற்கு எதிரான தமிழ் உணர்வாளர்களின் போராட்டம் என்னானது? லைக்காவின் முதல் தயாரிப்பான 'கத்தி' படத்தின்போது கத்திக் கத்திப் பேசிய புரட்சியாளர்கள் இப்போது எங்கே? லைக்காவின் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் விஜய் சேதுபதி நடித்தபோது ஓர் எதிர்ப்பும் கிளம்பவில்லையே! இப்போது ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், சூர்யாவின் படங்கள் உட்பட ஒரேநேரத்தில் ஆறுபடங்களைத் தயாரித்து தமிழ் சினிமாவை ஆள்கிறது லைக்கா. 

தமிழ் உணர்வாளர்களது கருத்தில் இப்போது ஏதாவது மாற்றம் வந்துள்ளதா? தமிழ் உணர்வு வட்டாரங்கள் இதைத் தெளிவுபடுத்திவிட்டு முத்தையா முரளிதரனின் படத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதுவே வரவேற்கத்தக்கது. நீங்கள் அடிக்கடி போராட்ட உத்திகளை மாற்றிக்கொண்டிருப்பதால் ஃபலோ பண்ணச் சற்றுச் சிரமமாயுள்ளது.

இச்செய்திக்கு கமெண்ட் அடித்திருக்கும் ஈழத் தமிழர் ஒருவர்,...ஒருவர்விஜய்சேதுபதி முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கலாமா வேண்டாமா என்று ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் இதர புலம்பெயர் தேசங்களிலும் விவாதங்கள் நடக்கிறது.. ஆனால் பெரும்பாலான தமிழர்கள் இந்த விவாதங்களை கண்டு கொள்வதே இல்லை.. அவர்களுக்கு நிறைய வேலைகள் இருக்கிறது..என்று கூறியிருக்கிறார்.