நண்பன் படத்தில் செந்திலாக நடித்திருந்த ஜீவா க்கு பதிலாக முதலில் வேறொரு  நடிகர் ஒப்பந்தமானதாகவும், பின்னர் சில காரணங்கள் சிம்பு நடிக்க இயலவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2012 இல் வெளிவந்த நண்பன் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் மாஸ் வெற்றியை பெற்றிருந்தது. . இப்படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார். த்ரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் மீளுருவாக்கமான இத்திரைப்படத்தின் மூலம் விஜயின் திரைப்படத்திற்கு முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.. தெலுங்கு மொழியில் ஸ்நேகிதுடு என மொழிமாற்றம் செய்யப்பட்டு 26 ஜனவரி 2012 அன்று ஆந்திராவில் வெளியிடப்பட்டு அங்கும் மாஸ் வெற்றியை பெற்றிருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதன் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி தேராதூன்,ஐரோப்பா, அந்தமான், கோயம்பத்தூர் மற்றும் சென்னையில் என பல இடங்களில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. All is Well என்னும் மந்திரத்தின் மூலம் ரசிகர்களை விஜய வசியம் செய்திருந்தார். இந்த வசனம் ஏற்கனவே இந்தி மொழியில் வெளிவந்த 3 இடியட்சு திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பொழுது போக்கு, சிறந்த துணை நடிகர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த நகைசுவை நடிகர், சிறந்த நடன இயக்குனர் என பல விருதுகளுக்கு அந்த ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. 

இந்நிலையில் நண்பன் படத்தில் செந்திலாக நடித்திருந்த ஜீவா க்கு பதிலாக முதலில் நடிகர் சிம்பு ஒப்பந்தமானதாகவும், பின்னர் சில காரணங்கள் சிம்பு நடிக்க இயலவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு தற்போது மாநாடு வெற்றியை ருசித்து கொண்டிருக்கையில் இந்த தகவல் கசிந்தயுள்ளது.