நடிகைகள் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் கதையெல்லாமா கேட்கிறார்கள் என்று ஆச்சர்யப்படுகிற ரகமா நீங்கள்? ஆமாம் எனில் இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆச்சரியப்படவைக்கக்கூடிய செய்தி. ஒரு தெலுங்குப் படத்தின் கதை பிடிக்காததால் வாங்கிய அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் நடிகை தமன்னா.

தெலுங்கில் ’ராஜு காரி காதி’ படத்தின் 3வது பாகத்தை உருவாக்க இருக்கிறார்கள். கதாநாயகியை சுற்றியே நகரும் கதை கொண்ட இந்த படத்தில் நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியிருந்தார். முதல் இரு நாட்கள் படப்பிடிப்பில் தன்னிடம் சொன்ன கதைக்கும் எடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கதைக்கும் வித்தியாசம் உள்ளதை உணர்ந்த தமன்னா, இயக்குநரிடம் கேட்க அவரோ, கதையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறோம்’ என்றிருக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில், ‘அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா.  இந்த படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று கூறி தமன்னா விலகியுள்ளார்.

ஓம்கர் இயக்கும் இப்படத்தின் துவக்க விழாவில் தமன்னா கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கிய பிறகு  விலகினாலும் கூட வாங்கிய அட்வான்ஸை ரோஷத்தோடு அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டாராம் தமன்னா.அவர் வசம்  தற்போது சயீரா நரசிம்ம ரெட்டி, குயீன் படத்தின் தெலுங்கு ரீமேக், பாலிவுட் படம் என கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.