தமன்னாவின் உழைப்பு:

தமிழ் திரையுலகில், அதிக நடிகைகளின் வருகையால்... வெற்றி படத்தில் நடித்த நடிகைகளால் கூட 3 முதல் 5 வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.

அந்த வகையில் தற்போதைய காலத்தில்  10 முதல் 15 வருடங்கள் கதாநாயகியாக தாக்கு பிடிப்பது ஆச்சர்யமான விஷயம் தான். அந்த வரிசையில் நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா, தமன்னா என சிலர் மட்டுமே உள்ளனர். 

இந்த பட்டியலில் உள்ள நடிகைகளில் ஒருவரான தமன்னா, தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வதற்கான காரணம், கடுமையான உழைப்பு என்று கூறுகின்றனர் அவருடைய நண்பர்கள்.

சொத்துக்காக போட்டி:

தாத்தாவின் சொத்துக்களை அடைய பேரன்கள் போட்டி போடுவதை கருவாக வைத்து, 'கோணாலா இருந்தாலும் ' என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. புதுமுகங்கள் கிரிஷ்க், மேகாஸ்ரீ காதல் ஜோடியாக நடிக்கிறார்கள்.

காதலும், நகைச்சுவையும் கலந்த இந்த படத்தை ந.கிருஷ்ணகுமார் இயக்குகிறார். ஜெ.தனலட்சுமி தயாரித்து இருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.