Asianet News TamilAsianet News Tamil

"சூப்பர் ஸ்டார் ரஜினி சார் நலம் பெற்று வீடு திரும்புவார்" த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட பதிவு!

TVK Vijay : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப இறைவனை பிரார்த்திப்பதாக பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

thalapathy vijay wished speedy recovery of rajinikanth ans
Author
First Published Oct 1, 2024, 7:10 PM IST | Last Updated Oct 1, 2024, 7:10 PM IST

தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளை முடித்துவிட்டு, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்கின்ற திரைப்படத்தில் நடிக்க தொடங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். வெளியூரில் அந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு "வேட்டையன்" படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைந்தார். 

அன்று மாலையே "வேட்டையன்" திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், மீண்டும் தன்னுடைய "கூலி" திரைப்பட பணிகளில் ஈடுபடுவதற்காக வெளியூருக்கு புறப்பட்டு சென்றார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் போன்ற டாப் நடிகர்களை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. 

மீண்டும் கோலிவுட் ஹீரோவுக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. தளபதி 69 - வெளியான முதல் அப்டேட்!

இந்த சூழலில் முதல் முறையாக பிரபல நடிகர் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்ற திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு திரை உலக சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் ஷாகிர், கன்னட திரை உலக நடிகர் உபேந்திரா, தமிழ் திரை உலகின் மூத்த நடிகர் சத்யராஜ், நடிகை சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

இந்த சூழலில் தான், நேற்று அக்டோபர் 30ஆம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஒரு வீக்கம் ஏற்பட்டிருந்ததாகவும். அது அறுவை சிகிச்சை இல்லாமல் எளிய முறையில் சரி செய்யப்பட்டு, தற்பொழுது அவர் பூரண நலத்துடன் ஓய்வெடுத்து வருவதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் அவர் வீடு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

தற்போது தன்னுடைய திரைப்பட மற்றும் கட்சி பணிகளில் பிஸியாக ஈடுபட்டு வரும் தளபதி விஜய், ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அதில் "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் சார் அவர்கள் விரைவில் பூரண உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமாற இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மெய்யழகனை காலி பண்ண இந்த வாரம் வெளியாகும் 8 படங்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios