Asianet News TamilAsianet News Tamil

Leo Release: IMAX-ல் வெளியாகும் தளபதியின் 'லியோ'! ரிலீசுக்கு வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் ஐமேக்சில் வெளியாக உள்ளது.
 

Thalapathy vijay starring Leo Movie Released in Imax
Author
First Published Oct 12, 2023, 9:54 PM IST | Last Updated Oct 12, 2023, 9:54 PM IST

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், தயாரிப்பாளர் S.S.லலித்குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ஒரு இந்திய தமிழ் மொழி ஆக்சன் திரில்லர் படம் தான் ‘லியோ’. இப்படத்தில் தளபதி விஜய், த்ரிஷாவுடன் சஞ்சய் தத், அர்ஜுன் சார்ஜா, கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியா முழுவதும் மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவையும் சேர்த்து அங்குள்ள ஐமேக்ஸ் வசதியுள்ள இடங்களில் ‘லியோ’ ரிலீஸாக இருக்கிறது. இதுவரை ஐமேக்ஸில் திரையிடப்படும் மூன்றாவது திரைப்படம் என்பதுடன் தளபதி விஜய் மற்றும் S.S.லலித்குமார் கூட்டணியில் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் படம் என்கிற அடையாளத்தையும் பெறுகிறது. 

Thalapathy vijay starring Leo Movie Released in Imax

CWC Pugazh Baby Name: அட குக் வித் கோமாளி புகழ்.. தன்னுடைய மகளுக்கு வைத்த கியூட்டான பெயர்! என்ன தெரியுமா?

“தொடர்ந்து முதல் தரமான திரையரங்கு அனுபவத்தை உலகமெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு வழங்கிவரும் ஐமேக்ஸுடன் பணிபுரிவுதில் நாங்கள் பரவசமடைகிறோம். ஐமேக்சில் வெளியாகும் மூன்றாவது திரைப்படத்தை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.  மேலும் தளபதி விஜய்யின்  நிஜமான கச்சிதமான நடிப்பாற்றலை இந்தவிதமான தொழில்நுட்ப தளத்தில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க இயலும்” என்கிறார் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சேர்மன் லலித்குமார்.

Thalapathy vijay starring Leo Movie Released in Imax

விஜய் டிவி 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகைக்கு பிரமாண்டமாக நடந்து முடிந்த திருமணம்! குவியும் வாழ்த்து!

“தொலைநோக்கு பார்வை கொண்ட திறமையாளர்களான தளபதி விஜய் மற்றும் S.S.லலித்குமார் ஆகியோருடன் ‘லியோ’வில் கூட்டணி சேர்ந்ததற்காக நாங்கள் பெருமைப்படுவதுடன் சினிமா ரசிகர்களுக்கு ஐமேக்ஸில் இந்த காவியத்தை காணும் வாய்ப்பையும் வழங்குகிறோம்.” என்கிறார் ஐமேக்சின் சர்வதேச மேம்பாடு மற்றும் விநியோக துரையின் துணைத்தலைவரான கிறிஸ்டோபர் டில்மேன். ரசிகர்கள் இந்த ஆக்சன் நிறைந்த படத்தை முடிந்தவரை பெரிய திரையில் கண்டுகளிக்க விரும்புவார்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்பதால் அவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை தரும் அந்த வசதியை ஐமேக்சில் வழங்குவதற்கு எங்களால் காத்திருக்க முடியாது. லோகேஷ் கனகராஜின் தொலைநோக்கு பார்வை கொண்ட இயக்கத்துடன் ஐமேக்ஸ் அல்ட்ரா ஸ்கிரீன் மற்றும் தரமான ஒலிநுட்பம் ஆகியவற்றுடன் இணைந்து வரும் ‘லியோ’ படத்தின் ஆக்சன் காட்சிகளுடனும் சென்னை மற்றும் காஷ்மீர் அழகான லொக்கேசன்களுடனும் பிரமிக்க வைக்கும். இந்தப்படம் 26 இடங்கள் வரை ஐமேக்ஸ் நெட்வொர்க் இந்தியாவுடன் வெளியாகிறது. அக்-19ல் ‘லியோ’ திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கிறது. வரும் அக்-14 முதல் டிக்கெட்டுகள் விற்பனை துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios