MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!

"எட்டணா இருந்தா.." முதல் "வாடிவாடி.." வரை - திரையரங்கையே அதிரவைத்த வடிவேலுவின் ஹிட் பாடல்கள்!

Vadivelu Hit Songs List in Tamil Cinema : காமெடி நடிகர் வடிவேலு பாடிய சூப்பர் ஹிட் பாடல்களின் பட்டியல் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Feb 21 2026, 11:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Vadivelu Hit Songs Collections Singing Career
Image Credit : X

Vadivelu Hit Songs Collections Singing Career

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நகைச்சுவை நடிகரான வைகைப்புயல் வடிவேலு உள்ளார். இவர் நகைச்சுவை மட்டும் அல்லாமல் ஹீரோவாகவும், அப்பாவுக்கு ஆகவும் பல வேடங்களில் நடித்த அசத்தியுள்ளார் என்றே கூறலாம். இவர் இவர் நடிக்கும் படங்களுக்கும் இவரே சொந்த குரலில் பேசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர் சிறந்த பாடகரும் கூட. இவர் பாடிய பாட்டுக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கும். எத்தனை பாட்டுக்கள் பாடி இருக்கிறார் என்றும் என்னென்ன பாட்டுகள் என்றும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

29
Vadivelu Hit Songs Collections Singing Career in Tamil Cinema Comedy Singer
Image Credit : our own

Vadivelu Hit Songs Collections Singing Career in Tamil Cinema Comedy Singer

வைகைப்புயல் வடிவேலு ஒவ்வொரு சூழ்நிலையிலும் தம்முடைய வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் அவர் ஒவ்வொரு படத்திலும் நடித்திருக்கிறார். பலரது வாழ்க்கையில் ஒவ்வொரு தருணங்களிலும் தனது வசனங்களால் நினைவு கொள்ளப்படும் வடிவேலு, தான் திரையில் தொடர்ச்சியாக நடிக்காத மீம்ஸ் உலகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறார்.

39
வடிவேலு:
Image Credit : our own

வடிவேலு:

வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவிற்கு, தன் தந்தை இறப்புக்கு பின்னர் குடும்ப பொறுப்புகளை கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. மதுரையில் புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம் போடும் சிறிய கடையொன்றில் வேலை பார்த்து வந்த வடிவேலுக்கு அங்கு எதிர்பாராவிதமாக சென்ற நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம், கிடைக்கிறது.பின்னர், ராஜ்கிரணின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த வடிவேலுவை, 1988-ம் ஆண்டில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் பயன்படுத்துகிறார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்.

49
வடிவேலின் முதல் படம்:
Image Credit : Google

வடிவேலின் முதல் படம்:

1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்தான் வடிவேலு முறையாக நடிகனாக அறிமுகமானார்.

முதல் படத்தில் முதல் பாடல்: இந்தப் படத்தில் தான் வடிவேலு முதல் முறையாக போடா போடா புண்ணாக்கு என்னும் பாடலை பாடினார்.

59
மறக்க முடியாத கதாபாத்திரங்கள்
Image Credit : Google

மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

 பல திரைப்படங்களில் கோவை சரளாவுடன் இணைந்து நடித்த வடிவேலு, அவரிடம் அடி வாங்கும் காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம்.வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ போன்ற திரைப்படங்களை கூறலாம். தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றில் வடிவேலு - கோவை சரளா இருவருக்கும் எப்போதும் தனி இடம் உண்டு. அதேபோன்று, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘குண்டக்க மண்டக்க’ படங்களில் வடிவேலு - பார்த்திபன் ஜோடியும் வெற்றிபெற்றது.

69
வடிவேலு பாடிய பாடல்கள்:
Image Credit : our own

வடிவேலு பாடிய பாடல்கள்:

முதன் முதலில் 1991ல் முதல் முதலாக ராஜ்கிரண் இயக்கத்தில் என் ராசாவின் மனசிலே‌ படத்தில் போடா போடா புண்ணாக்கு என்னும் பாடல் முதன்முதலாக பாடியுள்ளார். இரண்டாவது பாடல்: சக்தி படத்தில் 1996 ல் யானை யானை என்ற ஒரு பாடலை பாடியுள்ளார். மூன்றாவது பாடல்: 1996 இல் காலம் மாறி போச்சு படத்தில் வாடி பொட்ட புள்ள என்னும் பாடல் பாடியுள்ளார். இன்றும் பட்டி தொட்டி எல்லாம் இந்த பாடல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. நான்காவது பாடல்: 1997 ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்தில் ரயிலே ரயிலே என்னும் பாடலை பாடியுள்ளார்.

ஐந்தாவது பாடல்: 2001 என் புருஷன் குழந்தை மாதிரி படத்தில் நாலடி ஆறு அங்குலம் என்னும் பாடல் பாடியுள்ளார். ஆறாவது பாடல்: எல்லாமே என் ராசாதான் படத்தில் எட்டணா இருந்தா எட்டு ஊரு பாட்ட கேட்கும் இன்னும் பாடலை பாடியுள்ளார். ஏழாவது பாடல்: தடையம் படத்தில் லக்கு லக்கு என்னும் பாடலை பாடியுள்ளார். எட்டாவது பாடல்: ஜெயசூர்யா படத்தில் கட்டின அவள கட்டணும் டா என்னும் பாடலை பாடியுள்ளார். ஒன்பதாவது பாடல்: குண்டக்க மண்டக்க படத்தில் வந்துட்டா வந்துட்டா வந்துட்டா யா என்னும் பாடலை பாடியுள்ளார். பத்தாவது பாடல்: பகவதி படத்தில் கொக்கோகோலா பிரவுன் கலருடா இன்னும் பாடலை பாடியுள்ளார். பதினோராவது பாடல்: சச்சின் படத்தில் வாடி வாடி என்னும் பாடலை பாடியுள்ளார். பன்னிரண்டாவது பாடல்: பொண்ணு விளையிற பூமி என்னும் படத்தில் போயாகவும் மூஞ்சி இல்ல கைய வைக்க என்னும் பாடலை பாடியுள்ளார். பதின்மூன்றாவது பாடல்: ஏய் படத்தில் ஓரெழுத்து ஒன்னு என்னும் பாடலை பாடியுள்ளார்.

79
பதின்நான்காவது பாடல்:
Image Credit : Google

பதின்நான்காவது பாடல்:

ராஜகாளியம்மன் படத்தில் சந்தன மல்லிகையில் என்னும் பாடலை பாடியுள்ளார். பதினைந்தாவது பாடல்: நேசம் புதுசு படத்தில் ஊத்திக்கடா மச்சான் ஜோரா என்னும் பாடலை பாடியுள்ளார். பதினாறாவது பாடல்: எலி படத்தில் கன்னமே விட்டாயா இன்னும் பாடலை பாடியுள்ளார். பதினேழாவது பாடல்: வேல் படத்தில் ஆயிரம் ஜன்னல் வீடு பாடலில் வடிவேலு பாடியுள்ளார். பதினெட்டாவது பாடல்: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் பணக்காரன் என்னும் பாடலை பாடியுள்ளார். பத்தொன்பது பாடல்: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் டீசண்டாண ஆளு இன்னும் பாடலை பாடியுள்ளார். இருபதாவது பாடல்: நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் அப்பத்தா என்னும் பாடலை பாடியுள்ளார்.

89
இருபத்தொன்றாவது பாடல்:
Image Credit : our own

இருபத்தொன்றாவது பாடல்:

மாமன்னன் படத்தில் ராசா கண்ணு என்னும் பாடலை பாடியுள்ளார். இதுவரையில் இவர் முழுமையாக ஒரு பாடத்தில் ஒரு பாட்டு பாடியுள்ளார் இது மட்டுமல்லாமல் இவர் சின்ன சின்ன சிறிய பாட்டுகளும் காமெடியாக பாடி இருக்கிறார்.

99
வடிவேலினால் மாற்றியமைக்கப்பட்ட பாடல்கள்:
Image Credit : our own

வடிவேலினால் மாற்றியமைக்கப்பட்ட பாடல்கள்:

நகரம் படத்தில் காமெடியாக ஒரு பொய்யாவது சொல் கண்ணே மற்றும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை என்னும் பாடல்களை அவர் பாடியிருப்பார். இளமை ஊஞ்சல் ஆடுகிறது' படத்தில் இடம்பெற்ற 'தண்ணி கருத்திருச்சு. இன்னும் பாடலை அவர் பணியில் பாடியிருப்பார். என இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சினிமா துறையில் வடிவேலு வாழ்ந்தார் என்றே கூறலாம்.

வடிவேலு பாடிய சில மறக்க முடியாத பாடல்கள்:

எட்டணா இருந்தா எட்டூரு சொந்தம் - படம்: எல்லாமே என் ராசாதான்

வாடி வாடி கைநிறைய வளையல் தாரேன் - படம்: அல்லி அர்ஜுனா

ஒத்தையடி பாதையிலே - படம்: ஏய்

மன்னர் பரம்பரைடா - படம்: இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி

நாட்டுப்புறப் பாட்டு ஒன்னு - படம்: கிரி

போடு போடு ஓரம் போடு - படம்: வசீகரா

கையடிச்சுப் பேசிக்குவோம் - படம்: நாகேஷ் (மறைந்த சந்திரபாபுவின் பாடல் மறுஉருவாக்கம்)

பெரிய வீடா பார்த்து - படம்: கந்தசாமி

ராசா ராசா நான் உனக்கு - படம்: ராஜகாளியம்மன்

சீனா தானா தோய் - படம்: வசூலில் ராஜா MBBS (பாடலின் இடையில் வரும் நகைச்சுவை வரிகள்).

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
வடிவேலு
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கயல் மற்றும் ஆதிரை கைகோர்த்த மாஸ் ஆக்ஷன்! ஆனந்தி, ரோகிணி எங்கே? மகா சங்கமத்தில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
Recommended image2
ஆனந்தியின் முடிவால் அதிருப்தியில் ரசிகர்கள்! அன்புவுடன் சேரப்போவது எப்போது? சிங்கப்பெண்ணே சீரியலில் அதிரடி திருப்பம்!
Recommended image3
பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved