தளபதி விஜய்யின் 'The Greatest Of All Time' படத்தின் செகென்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தளபதி விஜய், 'லியோ' படத்தை தொடர்ந்து, தன்னுடைய 68-ஆவது படத்தை, பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்... நேற்று மாலை வெளியானது. ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் கசிந்த டைட்டிலான 'The Greatest Of All Time', என்பது தான் இப்படத்தின் டைட்டில் என்பதை உறுதி செய்தது படக்குழு.

அதே போல் யங் லுக்கில், ஒரு தளபதியும், இளம் வயதில் ஒரு தளபதி என... விஜய் இரட்டை வேடங்களில் பாராசூட்டில் இருந்து இறங்கி நடந்து வருவது போல் உள்ள ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டனர்.

Meena Photos: 47 வயதில்... 20 வயசு பெண் போல் யங் லுக்கில் நியூ இயர் ஸ்பெஷலாக நடிகை மீனா நடத்திய போட்டோ ஷூட்!

'GOAT 'படத்தின் ஃபர்ஸ்ட் ளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்கும் விதமாக, இன்று மாலை 'GOAT' படத்தில் இரண்டாவது லுக் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவலை வழக்கம் போல் தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.

Vidamuyarchi Update: அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் சேட்டிலைட் உரிமையை தட்டி தூக்கிய முன்னணி நிறுவனம்

AGS நிறுவனம் மிகப்பெரிய பட்ஜட்டில் தயாரித்து வரும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்திரி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…