- Home
- Gallery
- Meena Photos: 47 வயதில்... 20 வயசு பெண் போல் யங் லுக்கில் நியூ இயர் ஸ்பெஷலாக நடிகை மீனா நடத்திய போட்டோ ஷூட்!
Meena Photos: 47 வயதில்... 20 வயசு பெண் போல் யங் லுக்கில் நியூ இயர் ஸ்பெஷலாக நடிகை மீனா நடத்திய போட்டோ ஷூட்!
நடிகை மீனா 2024-ஆம் ஆண்டு புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக, வெள்ளை நிற சல்வாரில்... போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

meena
திரையுலகில், அறிமுகமாக ஓரிரு வருடங்களில் பல நடிகைகள், வந்த இடம் தெரியாமல் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டும் நிலையில், தொடர்ந்து 40 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், அழுத்தமான குணச்சித்திர வேடத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் மீனா.

meena
இவருடைய அப்பா ஆந்திராவை சேர்ந்தவர். அம்மா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பதாலோ, மீனாவின் அழகு 47 வயதிலும் துளி கூட குறையாமல்... நாளுக்கு நாள் கூடி கொண்டே செல்கிறது. இந்நிலையில் இவர் 2024 புத்தாண்டை வரவேற்று... வெள்ளை நிற சல்வாரில், எடுத்து கொண்ட போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
meena
நடிகை மீனா, தன்னுடைய கணவர், வித்யாசாகர் மறைவுக்கு பின்னர்... கடந்த இரண்டு வருடங்களாக, திரையுலகில் இருந்தும், சோசியல் மீடியாவில் இருந்தும் முற்றிலும் விலகி வீட்டின் உள்ளேயே முடங்கினார்.
meena
மீனாவின் மனநிலையை புரிந்து கொண்ட அவரது திரையுலக தோழிகளான, கலா மாஸ்டர், ரம்பா, சங்கவி, மகேஸ்வரி, ப்ரீத்தா, ஸ்ரீதேவி போன்ற பலர் அடிக்கடி மீனாவை சந்தித்து அவரை பழைய நிலைக்கு கொண்டுவந்தனர். கணவரின் இழப்பில் இருந்து மீண்டு... திரும்பவும் திரைப்படங்களில் மீனா நடிக்க துவங்கியுள்ளார்.
Thalapathy Vijay Selfie: நெல்லை ரசிகர்களுடன் தளபதி விஜய்யின் வேற லெவல் செல்ஃபி! வைரலாகும் வீடியோ!
meena
தற்போது மலையாள படம் ஒன்றில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மீனாவின் மகள் ஏற்கனவே... தெறி திரைப்படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D