தளபதி விஜய் மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் இன்று வழங்கிய நிலையில், ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட செல்ஃபி வீடியோ வைரலாகி வருகிறது. 

தளபதி விஜய் நடிப்பை, தொடர்ந்து மெல்ல மெல்ல அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளார். சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட போது, தளபதி மக்கள் இயக்கம் மூலம், பல உதவிகள் செய்த விஜய் தற்போது கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி பகுதி மக்களை நேரடியாக சந்தித்து தன்னுடைய கைகளால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரசிகர்கள் அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்ட விஜய், மழை வெள்ளத்தால் வீட்டை இழந்த மக்கள் பலருக்கு 10 ஆயிரம் முதல் 50-ஆயிரம் வரை நிதி உதவி வழங்கினார். அதே போல், மழை காரணமாக உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு சுமார் 1 லட்சம் வரை நிதி கொடுத்தார்.

Leo Prabhu Death: தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய மற்றொரு மரணம்! பழம்பெரும் நடிகர் லியோ பிரபு காலமானார்.!

விஜய்யின் இந்த செயல், தற்போது மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வரும் நிலையில்... நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர், ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றும் விதத்தில், அவர்களுடன் தளபதி செல்ஃபி ஒன்றையும் எடுத்து கொண்டார். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Scroll to load tweet…