விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் தற்போது அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தில் ராஜு தயாரிப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, ஷியாம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. தமன் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சி உள்ள நிலையில், சமீபத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம், வாரிசு டப்பிங் படம் என்பதால் அதனை விட அதோடு ரிலீசாகும் தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என வெளியிட்ட அறிவிப்பால் அங்கு வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீசாகுமா என குழப்பம் நீடித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... வாரிசுக்கு முட்டுக்கட்டை போடும் தெலுங்கு திரையுலகம்... தலையிடுமா ரெட் ஜெயண்ட்ஸ்? - உதயநிதி ஓபன் டாக்

Scroll to load tweet…

இது ஒரு புறம் இருக்க இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், மாஸ்டர் படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் வாரிசு படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

செவன் ஸ்கிரீன் நிறுவனம் வாரிசு பட வெளியீட்டு உரிமையை கைப்பற்றி இருந்தாலும், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுனத்திடம் கொடுத்து அப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளார்களா அல்லது அவர்களே தனியாக களமிறங்கி ரிலீஸ் செய்ய உள்ளார்களா என்கிற விவரம் வருகிற நாட்களில் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... 2 முறை கேன்சர் பாதிப்பில் இருந்து மீண்ட 24 வயது இளம் நடிகை... மாரடைப்பால் பரிதாப பலி - சோகத்தில் ரசிகர்கள்