‘நா ரெடி’னு விஜய் சொன்னா... நானும் ரெடினு கிளம்பி வந்த அஜித் - லியோவுக்கு போட்டியாக வந்த விடாமுயற்சி அப்டேட்
விஜய்யின் லியோ பட அப்டேட்டுகள் தொடர்ந்து வரிசைகட்டி வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி பட அப்டேட்டும் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். நடிகர் விஜய்யின் பிறந்தநாள நாளை கொண்டாடப்பட உள்ளதால், லியோ படத்தின் அப்டேட்டுகளும் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் நாளை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, லியோ படத்தில் அவர் பாடியை நா ரெடி என்கிற பாடலை வெளியிட உள்ளனர். இப்பாடலின் புரோமோ வீடியோவும் நேற்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இப்பாடலை நடிகர் விஜய் உடன் சேர்ந்து பிக்பாஸ் பிரபலம் அசல் கோளாரும் பாடி உள்ளதாக கூறப்படுகிறது. நாளை இதுதவிர இன்னும் நிறைய அப்டேட்டுகளை வெளியிட இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... Watch: 'லியோ' படத்தில் தளபதி விஜய்யின் குரலில்... தெறிக்கவிடும் 'நா ரெடி' புரோமோ!
இப்படி கோடம்பாக்கம் முழுக்க விஜய்யின் லியோ பட அப்டேட்டுகள் பற்றிய பேச்சுக்களே நிரம்பி வழிந்த நிலையில், தற்போது அதற்கு போட்டியாக நடிகர் அஜித்தும் சைலண்டாக தன் விடாமுயற்சி பட அப்டேட்டை சூசகமாக வெளியிட்டு இருக்கிறார். ஜூன் முதல் வாரமே விடாமுயற்சி பட படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், அது தொடங்கப்படாமலே இருந்தது. இதையடுத்து அஜித்தும் வெளிநாடு சென்றதால், ஷூட்டிங் அப்டேட் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை மாஸ் ஆக சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கினார் அஜித். அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. அஜித் சென்னைக்கு ரிட்டர்ன் ஆனது விடாமுயற்சி ஷூட்டிங்கிற்காக தானாம். ஷூட்டிங்கிற்கு நானும் ரெடி என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் அஜித்.
இதையும் படியுங்கள்... நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் விஜய் போஸ்டர்... தடபுடலாக தொடங்கிய தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோ இதோ