விரல் இடுக்குல தீ பந்தம்.. அது சிகரெட்டாக தான் இருக்க வேண்டுமா? நான் ரெடி பாடல் சர்ச்சைக்கு தளபதியின் பதிலடி!

'லியோ' திரைப்படத்தில், இடம்பெற்ற பாடல் வரிகள் சர்ச்சைக்கு... தளபதி விஜய் லியோ சக்ஸஸ் மீட்டில் பதிலடி கொடுத்துள்ளார்.
 

Thalapathy vijay replay for nan ready song issue

'லியோ' திரைப்படம் வெளியாகும் முன்பு பல பிரச்சனைகளை சந்தித்தது. அதில் மிகவும் முக்கியமானது... அனிருத் இசையில், தளபதி விஜய் பாடி வெளியான 'நான் ரெடி' பாடல். இந்த பாடலில் இடம்பெற்ற சில வரிகள் சர்ச்சைகள் நிரம்பி வழிவதாக பலர் இந்த பாடலை தடை செய்யவேண்டும் என்றும், இப்பாடலில் இடம்பெற்ற வார்த்தைகளை நீக்க வேண்டும் என போர் கொடி தூக்கிய நிலையில், பின்னர் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.

Thalapathy vijay replay for nan ready song issue

Thalapathy Kutty Story: ஸ்மால் எய்ம் இஸ் எ கிரைம்.. குட்டி கதையில் சூப்பர் ஸ்டாரை சுட்டி காட்டி பேசிய தளபதி!!

இந்த சர்ச்சைக்கு தற்போது தளபதி லியோ சக்ஸஸ் மீட்டில் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் ரெடி பாடலில் சில வரிகள் பிரச்சனை ஆச்சு. விரல் இடுக்குல,தீ பந்தம் என்ற வரி பிரச்சனை ஆச்சு. அது ஏன் சிகரெட்டாக தான் இருக்க வேண்டும், பேனாவாக கூட இருக்கலாம்ல. சினிமாவ சினிமாவாக பார்க்க வேணும் என கூறினார். தொடர்ந்து பேசிய தளபதி, பள்ளி கல்லூரி அருகில் கூட தான் மதுக்கடை உள்ளது. அதுக்குன்னு டெய்லி ரெண்டு ரவுண்ட் அடித்துவிட்டா பள்ளிகளுக்கு செல்கிறார்கள் என பதிலடி கொடுத்தார்.

Thalapathy vijay replay for nan ready song issue

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதே போல் தன்னுடைய ரசிகர்களை பார்த்து உங்களில் பல பேர் நேரம் காலம் பார்க்காமல் சக்தியை மீறி நல்லது செய்கிறீர்கள். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் உதவிகள் செய்வதை பார்க்கிறேன்.  எதிர்காலத்தில் எங்கு நல்லது நடந்தாலும் அது நம்ம பசங்க செய்ததாக தான் இருக்க வேண்டும் அது தான என் ஆசை என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios