லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியது. 

இந்நிலையில் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா பிரச்சனையால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதனால் “மாஸ்டர்” பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. கொரோனா பிரச்சனை என்று முடிவுக்கு வரும், எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற எந்த தகவலுமே தெரியாததால், இதுவரை “மாஸ்டர்” பட ரிலீஸ் தேதி குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. 

இதையும் படிங்க: சீரியல் நடிகையின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகரா?.... சின்னத்திரையில் தீயாய் பரவி வரும் தகவல்...!

கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாத சிறிய பட்ஜெட் படங்கள் அனைத்தும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் அமேசான் பிரைமில் ரிலீஸ் ஆக உள்ளதாகவும், சுமார் 9 கோடி ரூபாய்க்கு படத்தை விற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. 

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தை அமேசான் நிறுவனம் பெருந்தொகைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. எவ்வளவு விலை கொடுத்தாவது மாஸ்டர் படத்தை வாங்க தயாராக இருப்பதாக தயாரிப்பாளரிடம் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, விஜய்யுடன் ஆலோசித்து விட்டு முடிவு சொல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து “மாஸ்டர்” படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வது தொடர்பாக தயாரிப்பாளர், தளபதி விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

என் படத்தை ரசிகர்கள் தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக தான் நடிக்கிறேன். அதனால் ஓடிடி பிளாட்பார்மில் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று விஜய் சொல்லிவிட்டாராம். அதனால் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்போவதில்லை என்று அமேசான் நிறுவனத்திடம் “மாஸ்டர்” பட தயாரிப்பாளர் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி வாயில் இருந்து வந்த இந்த வார்த்தையை கேள்விப்பட்ட ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.