கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?
இதனால் இந்த வாய்ப்பு நடிகை காஜலுக்கு சென்றது. பெரிய நடிகர்கள் படம் என்றால் உடனே ஓகே சொல்லும் காஜல், உதயநிதியின் படத்திற்கு டாட்டா காட்டிவிட்டார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் காஜல் அகர்வால், நடிகர் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, உதயநிதியின் படத்தை உதறி தள்ளிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகை காஜல் அகர்வால் நடிப்பில், கடைசியாக 'கோமாளி' திரைப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் இந்தியன் 2 உட்பட மூன்று படங்களும், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழி படங்களும், இவரின் கைவசம் உள்ளன.
இதையும் படிங்க: த்ரிஷாவும் நயன்தாராவும் இவ்வளவு நெருங்கிய தோழிகளா?... பார்ட்டியில் அடிக்கும் லூட்டியை நீங்களே பாருங்கள்...!
அதே போல் இவர் நடித்து முடித்துள்ள, 'பாரிஸ் பாரிஸ்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் உள்ளது.ஊரடங்கு முடிந்ததும், இவரின் படப்பிடிப்பு பணிகள், அடுத்தடுத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுதுகிறது.இந்நிலையில் தற்போது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் படத்தில் நடிப்பதற்காக, பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி படத்தில் இருந்து காஜல் விலகியுள்ளார்.
இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?
நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக, 'ஆச்சார்யா' என்கிற படத்தில், திரிஷா நடிக்க இருந்தது. பின் ஏதோ காரணத்திற்காக அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதனால் இந்த வாய்ப்பு நடிகை காஜலுக்கு சென்றது.பெரிய நடிகர்கள் படம் என்றால் உடனே ஓகே சொல்லும் காஜல், உதயநிதியின் படத்திற்கு டாட்டா காட்டிவிட்டார். உதயநிதியின் படத்தில் நடிக்கவும் காஜலுக்கு ஜோடிகளில் சம்பளம் பேசியுள்ளனர். முதலில் ஓ.கே. சொன்னா காஜல், சிரஞ்சீவி பட வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க மறுத்துவிட்டாராம். இதே போல் ஏற்கனவே, 'நண்பேன்டா' படத்தில் காஜல் கமிட் ஆகி, பின் மற்றொரு பெரிய நடிகர் படத்தில் நடிப்பதற்காக, இந்த படத்தில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.