கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?
காதல் கதை என்பதால் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி கொஞ்சம் குளோஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்துள்ள படம் லவ் ஸ்டோரி. ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான அழகான காதல் கிராமத்தில் தொடங்கி நகரத்தை நோக்கி நகருவது போன்ற கதைக்களத்துடன் படம் உருவாகியுள்ளது. பக்கா தெலங்கானா கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த படத்திற்காக இயக்குநர் நடிப்பு பட்டறைகள் எல்லாம் நடத்தி, ஹீரோ நாக சைதன்யாவிற்கு பயிற்சி அளித்தார்.
இதையும் படிங்க: “டாப் ஆங்கிளில் மொத்தமும் தெரியுது”... பிரபல நடிகையின் கவர்ச்சி உடையை பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்...!
ஏ.ஆர்.ரகுமானின் மியூசிக் ஆல்பத்தை தயாரித்த பவன் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தில் இடம் பெற்ற "ஏய் பில்லா" என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில் ஒரு காட்சியில் நாக சைதன்யாவின் கன்னத்தில் சாய் பல்லவி அழுத்தி முத்தமிடுவார். செம்ம ரொமாண்டிக் அம்சங்களை உள்ளடக்கிய அந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது.
இதையும் படிங்க: ஒட்டு மொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டிய யாஷிகா... சொக்கிப் போன ரசிகர்கள்...!
காதல் கதை என்பதால் நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி கொஞ்சம் குளோஸாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் ரஃப் கட் வெர்ஷனை சமந்தா பார்த்ததாகவும், சில காட்சிகளில் மாற்றம் செய்யக் கூறியதாகவும் கூறப்படுகிறது. படத்தில் பல இடங்களில் தனது கணவர் நாக சைதன்யாவை விட சாய் பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சமந்தா கொதித்தெழுந்தார் என்று வதந்திகள் பரவின. மேலும் சாய் பல்லவி வரும் காட்சிகளை குறைக்கும் படி சமந்தா கூறியதாக தகவல்கள் வெளியாகின.
2
இதையும் படிங்க: சீரியல் நடிகையின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகரா?.... சின்னத்திரையில் தீயாய் பரவி வரும் தகவல்...!
இந்நிலையில் சாய் பல்லவி குறித்து சமந்தா கூறியதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்றும், ஊரடங்கு காலத்தில் எப்படி சம்ந்தா வெளியே வந்து படத்தை பார்த்திருக்க முடியும் என்றும் கூறியுள்ளனர். இதன் மூலம் சமந்தா பற்றி தேவையில்லாத வதந்தி பரவியது தெரியவந்துள்ளது.