தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பெயரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் திட்டவட்டமாக மறுக்க, நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தேன், அவருக்கே அது தெரியாது என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். அதுமட்டுமின்றி மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்களை ஊக்குவிப்பதற்காக தான் கட்சி ஆரம்பித்தேன் என்றும் தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் பிக்பாஸ் ரைசா... நீச்சல் குளத்திற்குள் நின்றபடி கிக்கேற்றும் போஸ்கள்...!

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார். சொந்த அப்பா மீதே நடவடிக்கையா? அப்போ நம்ம கதி என ரசிகர்கள் அப்போதே உஷாராகினர்.

 

 

இதையும் படிங்க: நயன்தாராவிற்கு ‘நோ’ சொன்ன தளபதி விஜய்... முடியாதுன்னு ஒத்த வார்த்தையில் முடிச்சிட்டாராம்...!

இந்நிலையில் பனையூரில் உள்ள தனது வீட்டில் மக்கள் இயக்கத்தில் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் உள்ள 200 மாவட்ட செயலாளர்களில் 50 பேரை வர வழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 30 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அப்பா அரசியல் கட்சி அறிவித்தது குறித்தும், அதில் யாரும் பங்கேற்க கூடாது என்பது குறித்தும் விஜய் பல்வேறு கட்டளைகளை பிறப்பிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.