லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்டாக நேற்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 

 

இதையும் படிங்க: கழுத்தில் மாலையுடன் மணப்பெண் நயன்தாரா... மாப்பிள்ளை விக்னேஷ் சிவனை வலைவீசி தேடும் ரசிகர்கள்... வைரல் போட்டோஸ்!

இந்த படத்தில் ஜான் துரைராஜ் (ஜேடி) என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. விஜய்க்கே உரித்தான அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் செம்ம ஹாப்பியில் உள்ளனர். நேற்று சரியாக மாலை 6 மணிக்கு சன் யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட அந்த டீசர் 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மாஸ் சாதனை படைத்துள்ளது. டீசரில் விஜய் பேசுவது போன்ற மாஸ் பஞ்ச் டைலாக் எதுவும் இடம் பெறவில்லை என ரசிகர்கள் குறைபட்டுக் கொண்டாலும், விஜய் சேதுபதியுடன் நேருக்கு நேர் விஜய் மோதுவது போன்ற காட்சியுடன் டீசர் நிறைவடைந்திருப்பதால் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.