மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. விஜய் கல்லூரி பேராசிரியராக இப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நெய்வேலியில் நிறைவடைந்த நிலையில், விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி மரண வைரலானது 

ஏற்கனவே குட்டி ஸ்டோரி சிங்கிள் பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்து சாதனை படைத்து விட்டது. ஆங்கிலம் கலந்த அந்த பாடலை தளபதி விஜய்யே பாடி அசத்தியிருந்தார். இப்படத்தின் அடுத்த சிங்கிளான வாத்தி கம்மிங் என்ற பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. படத்தில் நடித்துள்ள விஜய்யின் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதனால் நேற்று முதலே விஜய் ரசிகர்கள் செகண்ட் சிங்கிளுக்காக கொல வெறியுடன் காத்திருந்தனர். 

இதையும் படிங்க: பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு... ரஜினிக்கு எதிரான மனு தள்ளுபடி... எழும்பூர் நீதிமன்றத்தின் அதிரடி...!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சொன்ன நேரத்திற்கு சொன்ன படி வெளியான இந்த பாடல் வெளியாகியுள்ளது. தர லோக்கலான இசையுடன் செம்ம மாஸாக வெளியாகியுள்ள இந்த பாடலை சில 20 நிமிடங்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர். 

இதையும் படிங்க: தோழியிடம் அத்துமீறிய அமலா பால்... கண்ட இடத்தில் கைவைத்து சில்மிஷம்... முகம் சுழிக்க வைக்கும் ஆபாச நடனம்...!

பட்டையை கிளப்பும் இசை, புரியாமல் இருந்தாலும் புதிதான வார்த்தைகள் என படு வித்தியாசமாக உள்ள வாத்தி கம்மிங் பாடல் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அதை உலக அளவில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக விஜய் ரசிகர்கள் தீயாய் வேலை பார்த்து வருகின்றனர்.