மாநகரம், கைதி போன்ற படங்கள் மூலம் புகழ் பெற்ற இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் -  தளபதி விஜய்யுடன் முதல் முறையாக கை கோர்த்துள்ள திரைப்படம் “மாஸ்டர்”.  இந்த படத்தில் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறியுள்ளது. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளதால், 'மாஸ்டர்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இன்னும் படத்தின் முதல் பிரதி தயாராகவில்லை.

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, கெளரி கிஷன் உட்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. கத்தி திரைப்படத்திற்கு பின் இசையமைப்பாளர் அனிருத் தளபதி விஜயுடன் மீண்டும் இணைத்துள்ளார். மேலும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிப்பதாகவும், முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

உலகின் பல்வேறு நாடுகளை சின்னபின்னமாக்கி வரும் கொரோனா பிரச்சனையால்  இந்தியாவில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தியேட்டர்கள் அனைத்து மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள் அனைத்தும் எப்போது திறக்கப்படும் என்று தெரியாத நிலையில், தளபதி விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி ரிலீஸ் ஆவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதால் நவம்பர் 14ம் தேதி, அதாவது தீபாவளி அன்று மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.