Asianet News TamilAsianet News Tamil

விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

இந்து கடவுள்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை கருத்து தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 

Complaint Against Vijay Sethupathi For Alleged troll on Hindu Practices
Author
Chennai, First Published May 14, 2020, 10:51 AM IST

சமீபத்தில் இந்து கடவுள்களை விஜய் சேதுபதி அவமதித்ததாக வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி 2019ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் நடத்திய 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியுள்ளார். ’’கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். துணி மாற்றும்போது மூடப்படுகிறது?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார். 

Complaint Against Vijay Sethupathi For Alleged troll on Hindu Practices

இதையும் படிங்க: குட்டி பாப்பா டூ கவர்ச்சி கன்னியாக உருவெடுத்தது வரை சன்னி லியோனின் யாரும் பார்த்திடாத புகைப்பட தொகுப்பு...!

அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசியது அவருடைய ஒரிஜினல் கருத்து கிடையாது. மறைந்த கதாசிரியரும், நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் நிகழ்ச்சியில் பேசிய நகைச்சுவை துணுக்கை இந்த நிகழ்ச்சியில் மறுபதிவு செய்தார். ஆனால் விஜய் சேதுபதி இந்து மக்களின் மனம் புண்படும் படி நடந்து கொண்டதாகவும், இந்து மதத்தையும், இந்து கோயில்களின் ஆகம விதிமுறைகளையும் கொச்சைப்படுத்தியதாக கூறி இந்து மகா சபை சார்பில் ஏற்கனவே புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Complaint Against Vijay Sethupathi For Alleged troll on Hindu Practices

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

இதனிடையே விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ள அவரது ரசிகர்கள்  அவரது குடும்பத்தினரை தரக்குறைவாக பேசுவதாக கூறி சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீசாரிடம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றம் சார்பில் புகார் அளித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு எதிராகவும், ஆதரவாகவும் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலா வர ஆரம்பித்தன. இந்து கடவுள்கள் குறித்து விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை கருத்து தற்போது விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. 

Complaint Against Vijay Sethupathi For Alleged troll on Hindu Practices

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இந்து கடவுள்கள் குளிப்பதை காட்டுவது போல, உடை மாற்றுவதையும் காட்ட வேண்டுமென்ற விஜய் சேதுபதி சர்ச்சை பேச்சு தொடர்பாக ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆரணியைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ஜெய கோபி அளித்துள்ள புகாரில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி இந்து ஆகம விதிகளை கொச்சைப்படுத்தும் விதமாக காழ்ப்புணர்ச்சியுடன் பேசியுள்ளார். அவரது பேச்சால் மிகுந்த மன வேதனை மற்றும் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே இந்து ஆகம விதிகள் குறித்து பேசிய விஜய் சேதுபதி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் வேலூர் வடக்கு, சத்துவாச்சாரி, ராணிப்பேட்டை, வாலாஜா உள்ளிட்ட 5 காவல்நிலையங்களில் இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios