இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் விவாகரத்து பெற்ற  பின்னர் நடிகர் அமலா பால் முழுக்க திரைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.  ரத்னகுமாரின் ஆடை படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி அடைந்தது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மீண்டும் வலம் வர ஆரம்பித்துவிட்டார். தற்போது அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள அதே அந்த பறவை போல படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட படம் தான். அதில் சூப்பர் வுமன் அளவிற்கு அமலா பால் பறந்து பறந்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளாராம். 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

தற்போது ஹீரோயினுக்கு நல்ல வெயிட்டான கேரக்டர் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இடையில் மும்பையைச் சேர்ந்த பாடகரான பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. அந்த புகைப்படங்களை பாடகர் பவ்னிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நொடியில் இருந்தே சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்தது. 

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

இதையடுத்து அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி என்றும், மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறுதலாக சோசியல் மீடியாவில் வைரலானதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அமலா பால் தனது கேரளாவில் உள்ள தனது சொந்த வீட்டில் தங்கியுள்ளார். 

இதையும் படிங்க: குடும்ப குத்துவிளக்கு நிவேதா பெத்துராஜா இது?.... அப்பட்டமாக முன்னழகை காட்டி அட்ராசிட்டி...!

அங்கிருந்த படியே அவ்வப்போது தனது கவர்ச்சி கிளிக்ஸை பதிவேற்றி ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். அப்படி சமீபத்தில் குட்டி டவுசரும், டாப்பையும் போட்டுக்கொண்டு பீச்சில் தலைகீழாக யோகா செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளியது. இதையடுத்து தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள அசத்தல் போஸ் ஒருபக்கம் லைக்குகளையும், மறுபக்கம் விமர்சனங்களையும் குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

உடம்போடு ஒட்டி இருக்கும் தொடை வரையிலான கவுனில் விதவிதமாக போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அமலா பாலின் அழகை பார்த்து பலரும் சொக்கிப்போய் லைக்குகளை குவித்து வருகின்றனர். பலரோ என்னை கல்யாணம் செய்து கொள்கிறீர்களா? என அமலா பாலை கேட்டுள்ளனர். ஆனால் வழக்கம் போல சில விவகாரமான நெட்டிசன்களோ என்ன கன்றாவி டிரஸ் இது?, உங்களுக்கு சரியாக பொருந்தவே இல்லை என சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கின்றனர்.